பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

237


இனிய ஒலிநயமும் உணர்ச்சிமிக்க கற்பனை வளமும் நிறைந்ததாக உள்ளது



“ அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் .
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்”

என்று பதிகத்தில் (55-60) கூறப்படுகிறது அரசியலில் அறத்தின் ஆற்றல், கற்புடை மகளிரின் பெருமை, ஊழ்வினையின் வலிமை ஆகிய மூன்றும் நூலில் சிறந்து விளங்கும் கொள்கைகளாகும். இவற்றை வலியுறுத்தும் நோக்கத்தோடு இயற்றப்பட்ட ஒரு நூல், காவியச் சுவை மிகுந்ததாகவும் விளங்குதல் போற்றத் தக்கதாகும்

கண்ணகியின் தனிமைத் துன்பம், கோவலனைப் பிரிந்த மாதவியின் துயர், கோவலன் கொலையுண்டபின் கண்ணகியின் ஆற்றாமை ஆகியவை அவலச்சுவை நிரம்பியவை ஆதலின் இந்நூல் துன்பியில் நாடகம் போன்றதாக உள்ளது ஆயினும் முடிவில் ஆறுதலும், அமைதியும், துறக்க இன்பமும் கூறப்படுதலால் துன்பியல் மாறுகின்றது

இதன் காவியச் சுவையிலும், உயரிய கொள்கை களிலும், பெண்மை உற்ற துயரிலும், பெண்மை செய்த புரட்சியிலும் ஈடுபட்ட நெஞ்சினராய் பாரதியார் இந்நூலை வியந்து போற்றியுள்ளார் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றும் அவர் இதனைப் பாராட்டியுள்ளார்

இந்நூலின் முதல் பகுதியாகிய புகார்க்காண்டத்தில், காவியத் தலைவர்களான கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுதலும், மாதவியின் ஆடல்பாடல் அரங்கேற்றமும், கோவலன் மனம் வேறுபட்டு அவளை விட்டுப் பிரிதலும் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்