பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

செந்தமிழ் பெட்டகம்

அல்லது தொகுதி என்பது பொருள் உயர்திணை, அஃறிணை பற்றிய பல்வேறு பெயர்களையும், வினைபற்றிய பெயர்களையும் பாகுபாடு செய்து, அவற்றைத் தொகுத்துக் கூறுதலோடு, அச்சொற்கள் குறிக்கும் பொருள்களையும் வரையறுத்து உணர்த்துவது நிகண்டு நூல்களின் பொது இயல்பு. எனவே, மொழிப் பயிற்சிக்கு இன்றியமையாத கருவிநூல்களாக இந்நிகண்டுகள் அமைந்துள்ளமை தெளிவு

முதன்முதலில் நிகண்டு என்பது வடமொழியில் வேதத்திற்கு அங்கமாய், வைதிகச் சொற்களின் பொருள்களை உணர்த்தும் கருவிநூலுக்குமட்டும் சிறப்பாக வழங்கப்பட்டது பின்னர், நாளடைவில், சொற்பொருள் உணர்த்தும் நூல்களுக்கு எல்லாம் இப்பெயர் வழங்கத் தலைப்படலாயிற்று

தமிழில் நிகண்டு நூலை உரிச்சொல் என்றும், உரிச்சொல் பனுவல் என்றும் வழங்கும் வழக்கு முன்னர் இருந்தது ‘பிங்கலம் முதலாம் நல்லோர் உரிச்சொலின் நயந்தனர் கொளலே' என நன்னூலில் ‘உரிச்சொல்' என்ற பெயரைப் பவணந்தி முனிவர் ஆண்டுள்ளார். நன்னூலின் பழைய உரையாசிரியராகிய மயிலைநாதர் இச்சூத்திரத்தின் உரையில், பிங்கலம் முதலான உரிச் சொற் பனுவல் என்ற பெயர் வழக்கம் தெரியவருகிறது கயாதரர் என்பவர் இயற்றிய 'கயாதரம்’ என்னும் நிகண்டு நூலுள், 'ஓங்கு இடப கேதனன் பற்று மறவாத தேவைக் கயாதரன் தொல்வேதியன் செய்த உரிச்சொற் பனுவலும் மேம்படுமே'. (2) 'தண்டமிழோர், விரும்பிய கோவை உரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான் பெரும் பொருள் கண்ட கயாதரன் தேவைப் பெருந்தகையே’ (566) என்றும் வரும் இடங்களில் இவ்வழக்கினைக் காணலாம் இந்தத் தமிழ்ப் பெயர் யாது காரணத்தாலோ பெருக வழங்காது, நாளடைவில் மறைந்து போயிற்று. இதற்குப் பிரதியாக 'நிகண்டு’ என்னும் வடமொழிப் பெயர் தமிழாகி, தமிழுலகில் பெருக வழங்கி நிலைபெற்றுவிட்டது காங்கேயர் செயத் நூலாகிய