பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

செந்தமிழ் பெட்டகம்

-படுதலும் கூறப்படுகின்றன. அப்பால், மதுரையில் மாதரி என்னும் ஆய்ச்சியின் வீட்டிற்குச் சென்று தங்குதலும், கோவலன் சிலம்பு விற்கச் சென்று பொற் கொல்லனது சூழ்ச்சியால் கொல்லப்படுதலும், கண்ணகி ஆற்றாத் துயருறுதலும், பழிச்சொல் கேட்டுக் கொதித்தெழுதலும், பாண்டியனிடம் வழக்குரைத்தலும், வேந்தன் தவறுணர்ந்து நொந்து மடிதலும், மதுரை தீக்கிரை யாதலும் அடுத்த பகுதியாகிய மதுரைக் காண்டத்தில் உரைக்கப் படுகின்றன

மலைவளம் காணச் சென்ற சேரனிடம் குன்றவர் தாம் கண்ட கண்ணகியின் செய்தியைத் கூறலும், கேட்ட வேந்தன் பத்தினித் தெய்வத்திற்குக் கல்நாட்டும் முயற்சியை மேற் கொள்ளுதலும், வடநாட்டில் போர் நிகழ்தலும், சேரன் இயத்திலிருந்து கல் கொண்டு வந்து கங்கையில் நீராட்டலும், வஞ்சி மாநகரில் கல் நாட்டி வழிபடுதலும் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகின்றன

இந்நூலின் காலத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு இது சங்ககாலத்து நூலே என்று கருதுவோர் சிலர், தேவார காலத்திற்கும் பிந்தியது என்போர் ஒரு சிலர்; சங்ககாலத்தை அடுத்துத் திருவள்ளுவர்க்குச் சிறிது பிந்தித் தோன்றியது என்று அறிஞர் பெரும்பாலோர் கொள்கின்றனர்

இந்நூல் தமிழகத்தின் மூன்று பகுதிகளாகிய சோழ பாண்டிய சேர நாடுகளைப் பற்றியும், அவற்றின் தலை நகரங்களைப் பற்றியும், அவற்றை ஆண்ட மூவேந்தர்9களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றது ஆயினும், பல்லவரின் ஆட்சிபற்றி ஒரு குறிப்பும் இல்லை காஞ்சிநகரம், தேவார, திவ்வியப்பிரபந்தக்காலத்தில் பல்லவரின் செல்வாக்குப் பெற்ற நகரமாகக் குறிக்கப் பட்டுள்ளது அது போன்ற குறிப்பு ஒன்றும் சிலப்பதி காரத்தில் இல்லை ஆதலின் இந்நூல் பல்லவர் எழுச்சிக்கு முந்தியது எனலாம் பல்லவர்களைப் பற்றிய பழைய