பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

241

வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்று காட்டிய கதை (21 வஞ்சின மாலை, 4-6) முதலிய சில கதைகள், பிற்காலத்துப் புராணங்களிலும் காணப் படுகின்றன அவற்றைக் கொண்டு, இந்நூல் புராணகாலத்திற்குப் பிற்பட்டது எனக் கூறல் பொருந்தாது அக்கதைகள் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டில் கர்ணபரம்பரையாக மக்களிடையே வழங்கி வந்தன என்றும், சிலப்திகார ஆசிரியர் அவற்றைத் தம் நூலில் சேர்த்தார் என்றும், அவருக்குப் பின் புராணகாலத்தில் அவை மேலும் விளக்கப்பெற்றன என்றும் கொள்ளல் பொருந்துவதாகும்

காவியத்தில் கூறப் பெற்ற யாவும் உண்மைச் செய்திகளாக இருத்தல் வேண்டும் என்பது விதி அன்று காவியம் எழுதும் புலவர் தம் கற்பனைகளைச் சேர்த்துச் சுவைகூட்டும் கடப்பாடுடையர்; அன்றியும் தாம் கொண்ட குறிக்கோளை வலியுறுத்தும் பொருட்டுப் பொதுமக்களின் உள்ளம் கொள்ளும் வகையில் அவர்கள் விரும்புவன சேர்த்துக் கவர்ச்சியூட்டும் நோக்கமும் உடையவர் ஆவர் ஆதலின் வரலாற்றை ஆய்வது போல் காவியத்தை ஆய்தல் கூடாது இயற்கைக்கு மாறுபட்ட அற்புத நிகழ்ச்சிகள் பல இந்நூலில் இருத்தலை எடுத்துக்காட்டி, இது நாட்டில் நடந்ததைக் கூறவில்லை என்றும் முழுதும் கற்பனையே என்றும் கூறுவோர் உளர்

அற்புத நிகழ்ச்சிகள் பெருகியுள்ளன என்பதையும், இக்காவியம் ஒன்றிலே தான் அவை மிகக் குறைந்த அளவில் உள்ளன என்பதையும் கருதல் வேண்டும் செங்குட்டுவன் காலத்தில் கண்ணகிக்குக் கோயில் அமைக்கப் பெற்றதும், இலங்கை முதலிய நாடுகளிலும் கண்ணகி வழிபாடு பரவி, இன்று வரையிலும் இருந்துவருதலும், தமிழ்நாட்டிலும் மற்ற நாடுகளிலும் பிற்காலத்தில் பத்தினி வழிபாடு ஒரு சமயமாக வளர்ந்ததையும், பழைய வஞ்சிமாநகராகிய இன்றைய கொடுங்கோளுரில் உள்ள கோயிலின் தெய்வமாகிய

செ பெ - 16