பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

243

உள்ளன. புகார்க் காண்டத்தில் உள்ள அரங்கேற்றுக் காதையில் பழந்தமிழ் நாட்டு இசை, நாட்டியக்கலை களைப் பற்றியும், நாடக அரங்கின் அமைப்பைப் பற்றியும் பற்பல குறிப்புகள் இருப்பது போற்றத்தக்கவை அவற்றிற்கு உரையாசிரியர் தந்துள்ள விளக்கங்கள் மேன்மேலும் பயன்படும் வகையில் உள்ளன

இந்நூலுக்கு அரும்பதவுரை என்னும் பழைய உரையுமே, அதற்குப்பின் அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே ஆகிய இரண்டு உரைகள் உள்ளன அடியார்க்கு நல்லாரின் உரை முதல் இருபது காதைகளுக்கே கிடைத்துள்ளன. ஆயினும் அந்த உரையில் கலைகளைப் பற்றியும் பழங்காலத்தில் இருந்து மறைந்த நூல்களைப் பற்றியும் எவ்வளவோ அறிய முடிகின்றது வேறு எங்கும் கிடையாத இசைத்தமிழ் நாடகத்தமிழ் இலக்கணங்கள் அவர் உரையால் அறியக்கிடக்கின்றன

இந் நூலின் முதல் காண்டத்தை 1872-ல் சுப்பராய செட்டியாரும், 1876-ல் ஸ்ரீநிவாசராகவாச்சாரியாரும் அச்சேற்றி வெளியிட்டனர் 1892-ல் இரண்டு உரை களுடன் நூல் முழுவதையும் வெளியிட்ட பெருமை டாக்டர் உ.வே. சாமிநாதையரைச் சார்ந்ததாகும் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் நூல் முழுவதற்கும் உரையெழுதி வெளியிட்டனர் புகார்க் காண்டத்திற்கு மாத்திரம் சர் ஆர் கே சண்முகம் செட்டியார் ஓர் உரை எழுதி வெளியிட்டனர்

சிலப்பதிகாரத்தின் சிறப்பியல்புகள் பல இது தமிழ்நாட்டின் முப்பகுதிகளைப் பற்றியும், மூவேந்தர்களைப் பற்றியும், மூன்று தலை நகரங்களைப் பற்றியும் விரிவாகக் கூறும் நாட்டுக்காவியம் ஆகும் அரச மரபுகள் பற்றிய நூல்போல் தோன்றினாலும், காவியத்தின் தலைவன் தலைவியாக அமைந்துள்ளவர் சோழ நாட்டு வாணிகக் குடும்பத்து மக்களே ஆதலின், இது குடிமக்கள் காவியம் ஆகும் அவ்விருவருள்ளும் கண்ணகியாகிய