பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

செந்தமிழ் பெட்டகம்

கப்பல் பரிவாரங்களுடன் கரையிலிருக்கக் கண்டு மகிழ்ந்து, தரனிடம் விடைபெற்றுக் கப்பலேறிப் புறப்பட்டு, இராசமாபுரத்தை அடைந்தான்

கலுழவேகன் கட்டளைப்படி சீதத்தன் ஏற்படுத்திய யாழிசைப் போரில் காந்தருவதத்தையை எதிர்த்தாரனை வரும் தோல்வியுற, இறுதியில் சீவகன் அவளை வென்று மணந்தான் அது கண்டு பொறாத கட்டியங்காரன் சீவகனை எதிர்த்துப் போராடச் சிற்றரசர் பலரை ஏவினான் சீவகன் தன் தோழருடன் கூடி அவர்களை எதிர்த்து போராடிப் புறங்காட்டியோடச் செய்தான்

சுரமஞ்சரி, குணமாலை என்னும் இரு நங்கையர் அந்நாள் வழக்கப்படி தாம் தயாரித்த வாசனைப் பொடிகளுள் சிறந்தது எது என்பதை அறிய விழைந்து, தம் தோழியரிடம் அவற்றைக் கொடுத்து, அவற்றின் சிறப்பறிய வல்லாரிடம் காட்டிவரும்படி அனுப்பினர் தோழியர் அவற்றைப் பலரிடம் காட்டியும் உண்மையறிய இயலாமல், இறுதியில் சீவகனிடம் காட்டினர் சீவகன் பல்கலைப் பயிற்சியுடையவனாதலின், அவற்றை ஆய்ந்து, குணமாலையின் சுண்ணமே சிறந்ததெனக் கூறினன் தோழியர் மூலம் அதனை அறிந்த சுரமஞ்சரி வெகுண்டு, ‘சீவகன் தானே வந்து என்னை விரும்பும்படி யான் நோன்பு நோற்பேன்’ என்று கூறித் தன்னை ஆடவர் அணுகாதபடி கன்னி மாடத்தில் இருந்து நோற்றாள்

பின்னர் அந்தணரால் அடியுண்ட நாயொன்றுக்குச் சீவகன் 'பஞ்சநமஸ்காரம்’ என்னும் ஐந்து மந்திரத்தை உபதேசிக்க, அது அம்மந்திர மேன்மையால் சுதஞ்சணன் என்னும் தேவனாகி விண்ணுலகடைந்தது அத்தேவன் சீவகனை அணுகி, நன்றி தெரிவித்து, அவன் வேண்டும்போது உதவி செய்வதாகக் கூறிச் சென்றனன்

கட்டியங்காரனது பட்டத்து யானையாகிய அசனி வேகம் மதங்கொண்டோடிக் குணமாலையைக் கொல்ல