பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

செந்தமிழ் பெட்டகம்

சீவகன் அன்னையாகிய விசயை அருகனுக்குக் கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தாள், சுடுகாட்டில் தன் தோழி போல வந்து தனக்கு உதவி செய்த தெய்வத்துக்கு அச் சுடுகாட்டில் ஒரு கோயில் கட்டுவித்தாள், தன் மயிற்பொறியை மறவாது இருக்கும்படி தன் இருப்பிடத்தில் சுவரெங்கும் சித்தரிக்கச் செய்தாள், சீவகன் பிறந்த இடத்தை அறச்சாலையாக்கி, நாள்தோறும் ஐந்நூற்றைந்து குழவிகளுக்குப் பாலுஞ் சோறும் வழங்க ஏற்பாடு செய்தாள், தன் மருகியர் எண்மரையும் அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள், சீவகனை மகனெனப் போற்றி வளர்த்த சுநந்தையின் பேரன்யைப் பெரிதும் பாராட்டி, அவளைச் சிறப்பித்தாள், பின்பு சுநந்தையோடும் மற்றுஞ் சில மகளிரோடும் தவப்பள்ளியை அடைந்து, பம்பை என்னும் தவ மூதாட்டியிடம் அறவுரை கேட்டுத் துறவு மேற்கொண்டாள்.

சீவகன் மனைவியர் எண்மரும் ஒவ்வொரு மகனைப் பயந்தனர் சீவகன் அம்மைந்தர்க்குச் சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனத் தன் வாழ்க்கைக்கு வழிகோலிய பெருமக்களின் பெயர்களை வழங்கிச் செய்ந்நன்றி மறவாச் செம்மலாய்த் திகழ்ந்தான்.

ஒரு நாள் சீவகன் தன் மனைவியருடன் உவவனத்தை அடைந்து, சோலைவளங் கண்டு மகிழ்ந்து, ஒரு பலா மரத்தின் நிழலில் தங்கியிருநதான் அங்கு ஓர் ஆண் குரங்கு தனக்குத் துணையான மந்திக்கு ஒரு பலாப்பழத்தைப் பிளந்து, அதன் சுளைகளைக் கொடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தது அப்போது திடீரெனத் தோட்டக்காரன் தோன்றிக் கனியைக் கைப்பற்றி, அக்குரங்குகளை விரட்டினன் அதைக் கண்ட சீவகனுக்குச் செல்வம் நிலையாமை தெரியவந்தது அதனால் துறவுள்ளம் பூண்ட சீவகன், தேவியாருடன் சென்று அருகனை வணங்கினன்