பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

261

அப்பொழுது அங்கு வந்த சாரணர் இருவருள் இரத்தினப்பிரபை என்பவர் தம்மை வணங்கி வேண்டிய சீவகனுக்குத் தவத்தாற் பெறலாகும் நலங்களையும் அவனது முற்பிறப்பின் வரலாற்றையும் விளங்கக் கூறினர் சீவகன் அவரை மீண்டும் வணங்கி ஆசி பெற, அச்சாரணரிருவரும் அவ்விடம் விட்டகன்றனர்.

பின்னர்ச் சீவகன் தன் புதல்வன் சச்சந்தனுக்கு முடிசூட்டித் தன் மனைவியர் எண்மரையும் தன் தாய் விசயையுடன் தவப் பள்ளியில் விடுத்து, நந்தட்டன் முதலியவருடன் நகர் நீங்கி, தேவர் சிவிகை தாங்கச் சமவ சரணத்தை அடைந்து, ஸ்ரீவர்த்தமானரைக் கண்டு வணங்கி, சதன்மர் என்னும் கணதரரால் தீகவிக்கப் பெற்று, விபுலகிரியில் தவஞ்செய்தான் அத்தவத்தின் பயனாக உத்தரகுரு என்னும் சித்த க்ஷேத்திரத்தில் நிருவானநிலை எய்தினன்.

சீவகன், மனைவிமார் நோற்று இந்திரராயினர்; தோழர்கள் தவம் புரிந்து தேவர்களாகிப் பொன்னுலகை யடைந்தார்கள்

சீவகன்: ஏமாங்கத நாட்டரசன் இவன் தந்தை சத்தந்தன், தாயை விசயை இவன் பிறந்தவுடன் விசயை சிந்தாமணி (சவக- 311) என்றதாலும், அந்நூலிலேயே ‘சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்’ (3146) என வருவதாலும் இவனுக்குச் சிந்தாமணி என்னும் பெயருமுண்டென்று தெரிகிறது. இவன் விசயை வயிற்றிலிருக்கும்போதே கட்டியங்காரன் என்னும் அமைச்சனால் இவன் தந்தை கொல்லப்பட்டான் இவன் தாய் வானவூர்தியிலே தப்பிச் செல்கையில் சச்சந்தன் இறந்தான் என்பதைக் கட்டியங்காரன் முரசொலியால் அறிந்து, மூர்ச்சித்து, விமானத்தின்மேல் விழுந்தாள் அது சுடுகாட்டிலிறங்கியது. அப்போது தான் சீவகன் பிறந்தான் கந்துக்கடன் என்னும் வணிகன் வீட்டிலே வளர்ந்தான் விசயை துறவியாகித் தவஞ்செய் தாள்.