பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

செந்தமிழ் பெட்டகம்

உதயணன் பிறந்தான் அம்மலையில் தவம் புரிந்து வந்த மிருகாபதியின் தந்தையாகிய சேடகர் தாயையும் பிள்ளையையும் ஆதரித்து வந்தார் ஆங்கிருந்த பிரம சுந்தர முனிவரின் மகனாகிய யூகி என்பனுடன் உதயணன் வளர்ந்து, கல்வி கேள்விகளில் வல்லவனானான் உதயணன் பின்பு தனது யாழின் இசையால் தெய்வ யானை ஒன்றை வசப்படுத்தினான் யான் உண்ணு முன் நீ உண்டால் யான் உன்னை விடுத்துப் பிரிந்து விடுவேன் என்னும் நிபந்தனையுடன் அத்தெய்வ யானை உதயணனிடம் இருந்து வந்தது முதலில் உதயணன் தன் மாமனாகிய விக்கிரமனுடைய அரசுரிமையையும், பின்பு தன் தந்தையின் அரசுரிமையையும் பெற்று ஆண்டான்

உதயணன் ஒரு நாள் தெய்வ யானை உண்ணுமுன் உண்டுவிட்டானதலால் அஃது அவனை விடுத்து நீங்கியது அதனால் வருந்திய உதயணன் யாழுங் கையுமாய் அதனைத் தேடித் திரியுங்கால், உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதனன் என்பவனால் சிறைப்படுத்தப்பட்டான். இதை உணர்ந்து யூகி அந்நகரத்தில் உள்ள நளகிரி என்னும் பட்டத்து யானைக்கு மதம் பிடிக்குமாறு செய்துவிட்டான் மதம் பிடித்த நளகினாயை அடக்குதற் பொருட்டு உதயணன் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பெற்றான் உதயணன் அந்த யானையை அடக்கவே, பிரச்சோதனன் மகிழ்ந்து அவனைத் தன் மகளாகிய வாசவதத்தைக்கு யாழ் கற்பிக்குமாறு பணித்தான் அதனால் உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் காதலுண்டாயிற்று உதயணன் வாசவதத்தையுடன் அவ்விடத்தை விடுத்துச் சயந்தி என்னும் நகரம் சென்று, அவளை மணந்து கொண்டான் அவளது இன்பத்தில் மயங்கிய உதயணன் எல்லாவற்றையும் மறந்திருந்தான்

உதயணன் சில நாட்கள் வாசவதத்தையைப் பிரிந்திருந்தால்தான் அரசியலில் அவனது மனம் செல்லும் என்று எண்ணிய யூகி, தான் இறந்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தியைப் பரப்பினான் மேலும், ஒரு