பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

செந்தமிழ் பெட்டகம்

காண்டம் என்னும் ஐந்து காண்டங்கள் அவற்றுள் உஞ்சைக் காண்டத்தின் முற்பகுதியும், நரவான காண்டத்தின் பிற்பகுதியும் அழிந்து போய் விட்டன கிடைத்துள்ள பகுதியை டாக்டர் உ. வே சாமிநாதய்யரவர்கள் அச்சிட்டிருக்கிறார்கள்

பெருங்கதையை இயற்றியவர் கொங்கு வேளிர் என்பவர் அவர் ‘கொங்குவேள்’ என்றும், ‘கொங்க வேள்” என்றும் குறிப்பிடப்படுகின்றார் இவர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராதலாலும், வேளிர் மரபில் தோன்றியவராதலாலும் இவ்வாறு அழைக்கப் படுகின்றார் இவரது இயற்பெயர் இன்னதென்ற அறியக்கூட வில்லை; வேளிர் என்பார் வேளாண் வகுப்பைச் சேர்ந்த சிற்றரசர் ஆவர் முடிமன்னருக்கு மகட்கொடையளிக்கும் உரிமையை அவர்கள் பெற்றிருந்தனர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்னும் ஊரே இவர் பிறந்த ஊராகும்

கொங்குவேளிர் மங்கை என்ற ஊரில் பிறந்தார் என்றும், இந்நூலை இயற்றுவதற்கு இவர் மூன்று பிறப்புக்கள் எடுத்தார் என்றும், சங்கத்தார் கேட்ட கேள்விகட்கு இவர் தம் வேலைக்காரி ஒருத்தியைக் கொண்டு விடை கூறுமாறு செய்தார் என்றும் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது மங்கை என்பது விசய மங்கலம் ஆகும் இவர் இல்லறம், வானப் பிரத்தம், துற வறம் ஆகிய மூன்று நிலைகளில் இருந்து இந்நூலைப் பாடியிருத்தல் கூடும் சிறந்த கவிஞர்களின் வீட்டு வேலைக்காரர்கள் சிறந்த கல்வியறிவு உடையவர்களாக இருத்தலும் நடக்கக்கூடிய தொன்றே

‘பிருகத் கதா என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் தோன்றியிருத்தல் கூடும் அது குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப் பட்டதென்றும், அதில் பல்வேறு கதைகள் உள்ளன என்றும், பைசாச மொழியிலிருந்த நூலை துர்விநீதன் என்னும் அரசன் வடமொழியிற் செய்தான் என்றும் மைசூர் இராச்சியத்துக் கல்வெட்டொன்று கூறுகின்றது