பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

267

து நீதன் என்பவன் கி பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் ஆவான் அவன் கங்க வமிசத்தைச் சேர்ந்தவன்; சமண மதத்தினன் ‘பிருகத் கதா என்ற சொற்றொடர் தமிழில் ‘பெருங்கதை’ ‘மாக்கதை’ என்று பொருள்படும் பிருகத் கதா என்ற பெயருடன் பைசாச மொழியில் அமைந்த நூலை இதற்கு முதனூலாகக் கூறுவது பொருத்தமன்று ஏனெனில் அந்நூல் சைவசமயச் சார்புடையது இந்நூலோ சைன சமயச் சார்புடையது பைசாச மொழியில் பரந்து கிடந்த பிருகத் கதையை சேஷமேந்திரர் என்ற மகாகவி வடமொழியில் பிருகத் கதா மஞ்சரி’ என்ற பெயரில் சுருக்கி இயற்றினார் அது மிகவும் சுருங்கி யிருந்தது கண்டு, சோமதேவபட்டார் என்ற மகாகவி, “கதாசரித் சாகரம்’ என்ற பெயரில் வட மொழியில் ஒரு நூல் எழுதினார் இத்தகைய நூல்களின் துணைகொண்டு, துர்விநீதன் எழுதிய நூலைத் தழுவி இந்நூல் தோன்றியிருத்தல் கூடும் உதயணன் கதையைக் கூறும் மற்றொரு தமிழ் நூல் உதயண குமார காவியம் ஆகும் இதுவும் ஐயரவர்களால் அச்சிடப்பட்டிருக்கிறது

கொங்குவேள் மாக்கதை, உதயணன் கதை என்றும் வழங்கும் இதன் ஆசிரியர் சைனர் சைன சமயக் கொள்கைகள் பல இந்நூலில் விளக்கப்படுகின்றன

இவர் காலம் தெரியவில்லை சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவருக்கும் இவர் முற்பட்டவர் என்பர் டாக்டர் உ. வே சாமிநாத ஐயர்