பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

25

தொகுதி என்பது உலகம், நாடு, ஊர், மனை, மலை, ஆறு, நீர்நிலை முதலியவற்றின் பெயர்களைக் கொண்ட தொகுதி. பல்பொருட் பெயர்த் தொகுதியில் பொன், மணி, விரைப் பொருள், உணவுவகை முதலியன கூறப்பெற்றுள்ளன. செயற்கை வடிவப் பெயரில் ஆயுதங்கள், ஆபரண வகை, உடைவகை, ஊர்திவகை, விளையாட்டுக் கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக் காணலாம். பண்பு பற்றிய பெயர்த் தொகுதியில் காட்சிப்பொருள், உணர்விற்குப் புலப்படும் உண்மைப் பொருள் இவற்றின் குணத்தொடர்புபற்றிய பெயர்கள் சேர்ந்துள்ளன.

செயல் பற்றிய பெயர்த்தொகுதியில் வினைப் பெயர்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஒலி பற்றிய பெயர்த்தொகுதியில் சொல்வகை, பாவகை, யாழ்வகை, இசைவகை முதலியன பற்றிய பெயர்களைக் காணலாம். ஒருசொல் பல்பொருட் பெயர்த் தொகுதியாகிய பதினோராந் தொகுதியில் ஒரு சொல்லுக்கு உரிய பொருள்கள் எல்லாம் விரித்து உரைக்கப்பட்டுள்ளன. இறுதித் தொகுதியாகிய பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதியில் இருசுடர், முக்குணம் என்றாற் போன்று எண்ணால் வரும் தொகைப்பொருள்களின் விளக்கத்தைக் காணலாம்.

திவாகர் பாகுபடுத்து அமைந்த அமைப்பு முறையை அடியொற்றியே, பிங்கல நிகண்டு’, ‘சூடாமணி நிகண்டு’ ‘உரிச்சொல் நிகண்டு' முதலிய பிற நூல்களும் அமைந்துள்ளன. சூடாமணி நிகண்டு முதலிய சில நிகண்டுகளில் சில தொகுதிப்பெயர்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து வகைப்படுத்தியபோதிலும் பொது அமைப்பில் திவாகரர் வகுத்த முறையில் மாறுதல் இல்லை. கயாதர நிகண்டில், 'தெய்வப் பெயரியல்’, ‘மக்கட் பெயரியல்’ என்று இவ்வாறு 'தொகுதி’ என்பதற்குப் 'பெயரியல்' என்று பெயர் சூட்டியுள்ளனர். மிகப் பிற்பட்ட காலத்தில் தோன்றிய ‘நாமதீப நிகண்டு’