பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பௌத்த நெறியில்
மணிமேகலை


மிழிலக்கியத்துள் தோன்றியுள்ள காவியங்கள் ஐந்து அவையாவன சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலக்கேசி என்பன இவற்றுள் சிறந்தது சிலப்பதிகாரம் அதனை ஒட்டிப் பெருமையொடு விளங்குவது மணிமேகலை எனவே இரண்டையும் இரட்டைக் காவியம் என்று சொல்லலாம் சிலப்பதிகாரக் கதை மணிமேகலையில் தொடர்ந்து செல்வது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும்

மணிமேகலை என்னும் இந்நூலுக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் பெயரும் உண்டு இந் நூலினை அறிஞர்கள் பலரும் பலவாறாகப் பாராட்டி இருக்கின்றார்கள் பெரும்புலவர்கள் இந்த நூலின் நயத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் பெரு நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் இந்நூலிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்

கதைச் சுருக்கம் : கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை கோவலனுடைய முன்னோர்களில் ஒருவனுக்கு மணிமேகலா தெய்வம் உதவி செய்ததைக் கொண்டு, மணிமேகலையென்ற பெயரை வைத்தார்கள் கோவலனிறந்ததால் மாதவி துறவு பூண்டு பெளத்த மதத்திற் சேர்ந்தாள் மணிமேகலையையும் துறவு பூண்டு பெளத்த மதத்திற் சேர்ந்தாள் மணிமேகலையையும் துறவு பூணச் செய்தாள் மணிமேகலை தன்