பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

செந்தமிழ் பெட்டகம்

வேண்டினான் இவர் தாம் பாடும் கைசிகா கானத்தினா லுண்டான புண்ணியத்திற் சிறிது உதவி அவனைப் பாவத்தினின்றும் நீக்கி, வீடுபேறடைவித்தார் அந்த ஏகாதசி அன்று முதல் கைசிக ஏகாதசி அன்று வரை கைசிக ஏகாதசி வழங்குகிறது

இப்பெரியார் திருக்குறுங்குடியிலே திருமாலடி சேர்ந்தார்

நம்பியாண்டார் நம்பி :

(11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ) தமிழ் நாட்டு சைவப் பெரியார் சோழ நாட்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற் கருகிலுள்ள திருநாரை ஊரில் ஆதி சைவர் குலத்தில் பிறந்தார் இவர் தந்தை அங்குள்ள கோயில் கொண்ட பொள்ள பிள்ளையாரை வழிபடுவார்

நம்பியாண்டர் நம்பியின் குழந்தைப் பருவத்தில் இவர் தந்தையார் ஒரு நாள் வெளியூருக்குப் போனபோது பிள்ளையாரை வழிபட இவர் சென்றார் தம் தந்தை கொண்டுவரும் உணவினைப் பிள்ளையார் உண்பது வழக்கமென்றெண்ணியிருந்த இவர், தாம் கொண்டு சென்ற உணவையும் உண்பாரென எதிர்பாத்தார் உண்ணாமலிருப்பதைக் கண்டார்; பன்முறை வேண்டினார் எனினும் பிள்ளையார் உண்ணாமையால் தம் வழிபாட்டிலே தவறிருக்குமென் றெண்ணிக் கல்லிலே தலையை மோதிக்கொண்டிறக்க முயன்றார் உடனே பிள்ளையார் இவரைத் தடுத்துக் தம் துதிக்கையால் உணவை எடுத்தண்டார் தந்தை யுணர்ந்து மகிழ்ந்தார் பொல்லாப் பிள்ளையார் மீது இரட்டை மணிமாலையொன்று பாடினார்

இவர் அப்பொழுது சோழநாட்டையாண்ட இராசராசசோழன் வேண்டுகோளின்படி, பொல்லாப்-