பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

275

பிள்ளையார் அருளால் மூவர் தோவாரப்பதிக ஏடுகள் சிதம்பரந் திருக்கோயிலில் இருப்பதையறிந்து, அவற்றை யெடுத்துத் திருமுறைகளாக வகுத்தார்

இவர் இயற்றியவை திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலையும், கோயில் திருப்பண்ணியர் விருத்தமும், திருத்தொண்டர் திருவந்தாதியும், ஆளுடைய பிள்ளையாரான சம்பந்தர் வழிபாடாகத் திருவந்தாதி, திருச்சண்யை விருத்தம், திருமும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை என்னும் ஆறு நூால்களும், திருநாவுக்கரசுத் தேவர் திரு ஏகாதசமாலையும் ஆகிய பத்து நுால்களுமாகும்

இவற்றுள் திருத்தொண்டர் திருவந்தாதி என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை ஆதரவாகக் கொண்டு, அக்காலத்தில் வழங்கிய கதைகளை அமைத்துச் சிவனடியாரான அறுபத்து மூன்று நாயன் மார்களின் வரலாற்றையும் சுருக்கிக் கூறுவதாகும் பெரியபுராணம் பாடுவதற்கு இதுவும் திருத்தொண்டத் தொகையும் ஆதரவாக இருந்தன

நம்பிள்ளை :

இப்பெரியர் திருவரங்கத்திற்குத் தெற்கேயுள்ள நம்பூர் என்ற ஊரில் அவதரித்தவர் வரதராஜர் என்பது இவருடைய இயற்பெயர் திருக்கலிகன்றிதாசர் என்ற பெயர் ஆசாரியரால் இடப்பட்டது கந்தாடை தோழப்பரால் லோகாசாரியர் என்ற திருப்பெயர் இடப்பட்டது ஆசாரியரான நஞ்சீயர் இவருடைய குணாதிசயங்களைக் கண்டு, ‘நம்பிள்ளையோ என்று தழுவிக் கொண்டார்; அது முதல் நம்பிள்ளை என்ற திருநாமம் வழங்கலாயிற்று தென்சொற் கடந்து வடசொற் கடற்கு எல்லை தேர்ந்தவர் திருவாய் மொழிக்கு நூறு உரு அர்த்தம் நிர்வகித்த தம் ஆசாரியரான நஞ்சீயருக்குச் சதாபிஷேகம் செய்தவர்