பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

செந்தமிழ் பெட்டகம்


நம்மாழ்வார் :

பரதகண்டத்தில் வடகோடியில் அவதரித்த புத்த பகவானைப்போல் தென்கோடியில் அவதரித்துப் பரஞானச் சுடரை வீசிய பெரியார் ஸ்ரீ சட கோபர் என்ற நம்மாழ்வார் இவர் அருளிய ஞானச் செல்வத்தின் பயனாக விளைந்ததே ‘ராமானுஜ சித்தாந்தம் என்று கூறுவர் அதனாலேயே இவரை ஸ்ரீவைஷ்ணவ குலபதி என்றும்.இவருடைய அருளிச்செயல்களைத் தமிழ் மறை என்றும் போற்றுவதும், கோயில்களிலும் இல்லங்களிலும் இவரைத் தொழுகுலமாக வைத்து நித்தமும் வழிபடுவதும் வைணவர்க்கெல்லாம் பொதுக்கடமையாயின இவருடைய ஞானப்பெருக்கு கங்கை நாடுகளிலும் பரவியதாகும்

350 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ‘இந்தி ராமாயண’ ஆசிரியர் துளசிதாசர் சடகோபாலரை தலைமையாகக் கொண்ட வைஷ்ணவாச்சாரியாரின் சம்பந்தம் பெற்றவர் பிரம்மாணம் மூலம் தெரிகிறது இக்காலத்து வடநாட்டு மடாதிபதிகளான இந்துக்களில் நூற்றுக் கணக்கானவர்களும் அவ்வாறே வைஷ்ணவ ஆசாரியத் தொடர்புடையவராயிருக்கின்றனர்

இவர் ஆழ்வார்திருநகரி என வழங்கும் திருக்குருகூரில் ஆண்ட சிற்றரசர் குலத்துக் காரியார் என்பவர்க்கு, மலைநாட்டுத் திருவண்பரிசாரம் என்ற தலத் தினரான உடையநங்கையார் என்ற தேவியிடம் புத்பிரராய் அவதரித்தவர் மிக்க இளம்பருவத்தே இறைவனருள் , அவனை நேரே தரிசிக்கப்பெற்றுப் பரமஞானியாய் யோகத்தில் ஆழ்ந்து வேறு உலக சிந்தையற்று இருந்தவர் திருக்கோளுடர் அந்தண முனிவரான மதுரகவிகள் இவர் மகிமைகளை உணர்ந்து, இவரை வழி பட்டுக் பேரருள் பெற்றனர். பரஞான பரமபக்திகளாலும் ஈசனருளாலும் தாம் கண்ட உத்தம தத்துவங்களைத் திருவாய்மொழி, திருவிருத்தம்,