பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

செந்தமிழ் பெட்டகம்

இத்தொகுதிகளை ‘வர்க்கம்’ என்ற பெயரால் அழைக்கின்றது மற்றும் இவர் அமைத்துள்ள முறை பழைய முறையைத் தெளிவாகக் கூறுபடுத்தி விளக்குவதாகவும் உள்ளது

நாமதீபநிகண்டு நூலை இயற்றிய கல்லிடைக்குறிச்சி சிவசுப்பிரமணியக் கவிராயர் தமது நூலை உயர்திணைப் படலம், அஃறிணை உயிர்ப்பொருட்படலம், அஃறிணை உயிரில் பொருட்படலம், குணநாமப்படலம் என நான்கு படலமாகக் கொண்டு, அவற்றின் உட்பிரிவுகளை ‘வர்க்கம்’ என்ற பெயரால் வழங்கியுள்ளனர். உதாரணமாக, அஃறிணை உயிர்ப்பொருள் வர்க்கம் ஊருயிர்ப் பொருள் வர்க்கம், நீர்வாழ் உயிர்ப்பொருள் வர்க்கம், தாவர உயிர்ப்பொருள் வர்க்கம், என ஐந்து வர்க்கங்களாகக் கையிண்டனர் இவை பழைய நிகண்டுகளில் விலங்குப்பெயர்த் தொகுதி, மரப்பெயர்த் தொகுதி என்ற இரண்டில் அடங்கும் இங்ஙனம் படலமாகவும் வர்க்கமாகவும் பெயர்களை அமைத்துள்ள இவரது அமைப்பு, பழைய நிகண்டுகளின் பொருளமைப்பை விடத் தெளிவான முறையை மேற்கொண்டது என்று கருதலாம்

பன்னிரு தொகுதியாக அமைந்த பெயர்களை முக்கியமாக மூன்று தொகுதிகளில் அடக்கிவிடலாம் ஒன்று ஒருபொருட்பல்பெயர்த் தொகுதி பல பெயர்களையும் ஒருகுறித்த நெறிமுறையில் அமைத்துக் கூறுவது இதன் இயல்பு திவாகரத்துள் அமைந்துள்ள முதல் பத்துத் தொகுதிகளும் இவ்வகையினவாகும் இரண்டாவது ஒருசொல் பல்பொருட் பெயர்த்தொகுதி இது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பல பொருள்களையும் தொகுத்து உரைப்பது திவாகரர் அமைத்த பதினோராந் தொகுதி இது பற்றியது மூன்றாவது பல்பொருட் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதி இது இருவினை, முத்தீ என்றாற் போன்ற தொகைப் பெயர்களை விளக்குவது இதனைத் திவாகரத்தின் 12ஆம் தொகுதியில் காணலாம் இம்மூன்று வகையான பெயர்த்-