பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

செந்தமிழ் பெட்டகம்

இம்முத் தொழில்களையும் அப் பரமான்மாவே மூவுருவாக நின்று இயற்றுகிறதென்பதும், இச்செயல்கள் எல்லாம் நித்தியமாகப் புரியும் அவன் மாய விளையாட்டுக்களே என்பதும் ஆழ்வார் கொள்கைகள்

பரம்பொருளானது மூலவித்து தேவர், மக்கள் முதலிய சேதனர்களும் பிற அசேதனர்களும் அம்மூல வித்தின் பரிணாமமாக அமைந்தனவே ஆதலால் மக்கள் தகுதிக்கும் பக்குவத்துக்கும் ஏற்பச் சமய பேதங்கள் அமைந்துள்ளன என்றும், அச்சமய தெய்வங்கள் யாவும் மூலப்பரம்பொருளின் திருவுருவங்களே என்றும், அதனால் அவரவர் தத்தம் கடவுளரை வழிபடக் குறையில்லை என்றும், அவ்வழிபாடுகள் யாவும் முடிவில் முதற்கடவுட்கே உரியவாம் என்றும் கூறுவர் இப்பெரியார்

சீவான்மா தன் மாயா பந்தங்களை அகற்றிப் பரமான்மாவை அடைவதற்கு ஆழ்வார் தெளிந்த உத்தமநெறி பிரப்த்தி என்ற மார்க்கமாகும் அஃதாவது, இருவகைப் பற்றுமற்று ஈசனருளையே இடையறாது நினைந்து, தனக்கொரு பாரமுமின்றி அவனொருவனையே சரணமடைதலாம் கீதை முடிவில் கண்ண பிரான் அருச்சுனனுக்கு காட்டியருளியதும் உரியதுமான முத்தி வழி இதுவே என்றும், பரமஞானிகட்கும் இது வேண்டத்தக்கது என்றும் ஆழ்வார் தெளிய அருளிச் செய்வர்

இனி, தாமுகந்த பரம்பொருளான திருமால், காத்தற்றொழிலை மேற்கொண்டு உலகோர்க்கு அருள்புரிந்த அற்புத வரலாறுகள் ஆழ்வார் உள்ளத்தைக் பெரிதும் கவர்ந்தன அப்பகவானது அவதார விசேடங்களிலும் திருக்கோயிலிருப்புக்களிலும் ஈடுபட்டு, ஈசனருளால் முத்தி பெற்ற பத்திமான்களெல் லாம், பிரபக்தி நெறி நின்று பேறு பெற்றவர்களே அன்னோரைப் பின்பற்றித் தம் பத்திப் பெருக்கைச் செலுத்துவதற்கு இவ்வாழ்வார் பெரிதும் உவந்தருளிய