பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

279

அவதாரமூர்த்தி கண்ணபிரானே யாவர் இவ்வாறு கண்ணனைத் தாம் சிறப்பாகப் பற்றுதற்கு, அவன் தம் மனத்துள் நின்றுகொண்டு, தன் காரியமாக எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று இடைவிடாது உணர்த்தி வருதலே காரணம் என்கிறார் இவ்வாழ்வார் இவ்வாறு பகவானுடைய அருண்மழை ஆழ்வாரிடம் தேங்கிய, நிலையில், அவனும் இவரும் தாயுங் குழந்தையும் போலவும், உத்தம நாயக நாயகியர் போலவும் ஒரு வரையொருவர், ஆர்வத்தோடு பருகியும், கூடியனுபவிக்கு நிலையில் தன் வசமற்றும், புகழ்ந்து பாடி ஈடுபட்டு நிற்பர்

பரமனை அடையும் பெரும்பேறு, அவனருளால் கைகூடுவதன்றிக் கேவலம் ஆன்மாவின் முயற்சியால் அடையக்கூடியதன்று என்பதே இவர் திருவுள்ளம் அவனது அருளுக்கு உரியநிலைக்களமாகத் தன்னை ஆக்கிக் கொள்ளுமளவே ஆன்மா செய்யக்கூடியதாகும் இவ்வாறு பகவான் இவருடன் இணைந்த நிலையில் இவர் அருளிச் செய்த பாசுரங்கள் அருமை பெருமை வாய்ந்தவை

ஆழ்வார் தாமருளிய திருவாய்மொழியைத் தாமே பாடிய பிரபந்தமாகக் கூறவும் துணிந்திலர் பகவானே தம் வாக்கின்நின்று கொண்டு தம்மைத்தாமே பாடிய 'இருந்தமிழ்நூல்' ஆக அதனைக் கூறுகின்றார் இங்ஙனம் எதிர்பாராத இறையருள் தனக்கு வாய்த்தது போலவே, இக்கவிபாடும் பரமகவிகளா தத்தம் காலத்துள்ள புலவர்களிடமும் அவ்வருள் வெள்ளம் பாயத்தடையில்லை என்பதே இவர் கருத்து ஆகவே, அப்புலவர் குழாத்தை நோக்கி, ;'செஞ்சொற் கவிகாள், உயிர் காத்தாட் செய்ம்மின்' என்று கூவியழைத்துத் தாம் பெற்ற பேற்றை அவர்க்குக் கூறுவாராயினர்

அகப்பொருட்டுறைகளை இழிவான பொருளாகவே கொண்டு, மக்களைத் தலைவராகப் பாடிவந்த