பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

281

கொண்ட லீலா விபூதி' யான இவ்வுலகம் யாவும் பாழடைந்துபோம் என்ற கருத்தே அவ்வாறு வேறு படுத்தற்குக் காரணமென்றும், இவற்றை நன்குணர்ந்த அனைவருமே அவனைச் சரணாகதியாகப் பற்ற விரையுங்கள் என்றும் ஆழ்வார் உபதேசிக்கின்றார்

யாவரும் ஒருங்கு திரண்டு, சரணாகதியான சத்தியாக்கிரத்தைப் பகவானிடம் புரிவோமாயின், அவனது மாய ஆட்சி முறை முற்றும் மாறவும், அதனால் மக்கள் எல்லாம் விடுதலை பெற்ற நித்தியானந்த வாழ்வான சுதந்திரத்தை இம்மையிலே அடைந்துய்யவும் தடையில்லை என்பது நம்மாழ்வாரின் அற்புத உபதேசம் இங்கு அவரருளிய முடிவான பொன்மொழி, 'ஒக்கத் தொழுகிற்றிராகில் ஒன்றுங் கலியுகமில்லையே' என்பது

இவ்வாறே வேதாந்த முடிவுகளான அரிய பெரிய தத்துவங்கள் இவர் அருளிச் செயல்களில் மலிந்து திகழ்வன இவை யாவும், முன்னோர் அருளிய ஈடுமுதலிய பேருரைகளால் அறியத் தக்கவை

திருவழுந்துார் :

இவ்வூர், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கும் மாயவரத்துக்கும் இடையே உள்ளதாகிய தேரழுந்துார் என்னும் புகைவண்டி நிலையத்தின் தென்கீழ்பால் இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இது பாடல் பெற்ற தலமும், வரலாற்று இயைபுடையதும் ஆகும் அகத்திய முனிவர் தமக்கு நேர்ந்த ஒரு சாபத்தை நீக்கும் பொருட்டு இத்தலத்துக்கு வந்து, சிவபெருமானைக் கருதித் தவம் புரிந்திருக்க, வான் வழியே ஊர்ந்து சென்ற ஓர் அரசனது தேர், அம்முனிவருக்கு நேரே பறந்த காரணத்தால், நிலத்தில் விழுந்து அழுந்தியமைப்புற்றித் தேரழுந்துார் என்றாயிற்றெனப் புராணங் கூறும். இதனை அழுந்துார் எனவும் வழங்குவர். திருவழுந்தூர் என்பது