பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

செந்தமிழ் பெட்டகம்

தேரழுந்தூர் எனச் சிதைவுற்றிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுவர்

சிவன் கோயில் இவ்வூரின் கீழ்பால் உள்ளது மேற்குப் பார்த்த வாயிலையுடையது இக்கோயிலுக்கு மாமடம் என்றும் பெயர் சில முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்தமையால் இறைவன் திருப்பெயர் ஓதுவித்தார் (அத்தியாபகேசர்) எனப்படும் அம்பிகையின் திருப்பெயர் சவுந்தராம்பிகை தீர்த்தம் வேத தீர்த்தம் வேதங்களும், அகத்தியர் முதலிய முனிவர்களும் விண்ணவர்களும், திக்குப்பாலகர்களும் பூசித்துப் பேறுற்றதென்பர் இத்தலம் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய தேவாரங்களையுடையது

திருமால் கோயில் :

திருமங்கை மன்னன் பாடிய கோயில் இவ்வூர் மேல்பாகம் உள்ளது திருமால் கோயில் கொண்ட (அர்ச்சாவிக்கிரக) கோலங்களில், இங்குள்ளது நின்ற திருக்கோலம் பெருமாள் திருப்பெயர் ஆமருவியப்பன், அம்பிகையின் திருப்பெயர் செங்கமலவல்லித்தாயார் கோயில் கிழக்கு நோக்கியது; கருடவிமானம் என்னும் பெயரினது தீர்த்தம் தரிசனபுஷ்கரிணி

உபரிசிரவசு என்னும் ஓர் அரசனும், தரும தேவதையும் இத்தலத்துப் பெருமானைப் பூசித்துப் புேறுற்றனர் என்பர் காவிரியாறும் பெண் வடிவில் வந்து பூசித்துப் பேறு பெற்றமை தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படுகின்றது அதற்கு அறிகுறியாகக் காவிரியின் படிமம் ஆமருவியப்பனுக்கு அருகில் உள்ளது

கம்பர் இவ்வூரினரென்பர். கம்பராமாயணம் சிறப்புப்பாயிரத்து (தனியன்)' ... சோழ நாட்டுத் திருவழுந்துர்த் தாசிபாடியது’ என்னும் தலைப்பில், ‘கம்பன் என வருவதாலும், தமிழ் நாவலர் சரிதையில், 'நீ எந்தவூர் என்று சோழன் கேட்டதற்குத் திருவழுந்தூர்த்