பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

செந்தமிழ் பெட்டகம்

கல்வெட்டு :

இவ்வூர்ச் சிவன் கோயிற் கல்வெட்டுக்கள் ‘மூன்றாங்குலோத்துங்கன் காலத்தவை” என்றும், செயங்கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந்துரர் நாட்டுத் திருவழுந்துார் திருமடம் உடைய நாயனார்’ என வருவதால் நாட்டின் பெயரும் கோயிலின் பெயரும் (சம்பந்தர் தேவாரம் குறிப்பது) பிறவும் அறியலாகும்

திருவாய்மொழி :

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட பிரபந்தங்கள் நான்கனுள் இறுதிப் பிரபந்தமாகும் வாய்மொழி என்பதற்கு, வேதம் என்பது பொருள் திரு என்பது இதனுடைய ஒப்புயர்வற்ற சிறப்பினை விளக்க வந்த அடைமொழி 'மாயா வாய்மொழி உரைதர வலந்து' (பரிபாடல்) என்ற இடத்து வாய்மொழி என்ற சொல் மறை என்ற பொருளைப் பயந்து நிற்றலைக் காணலாம்.

தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கிலும் செய்யுளிலும் இலைமறைகாய்போல் மறைந்து கிடக்கும் வேதாந்த விழுப்பொருளாகிய தத்துவங்களை எல்லாம் குன்றின்மேல் இட்ட விளக்கைப்போன்று எல்லாரும் அறியத் தெளியக் கூறுவது திருவாய்மொழி தத்துவப்பொருள்களை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் ஐயந்திரிபற உணர்த்துவதனால், தோன்றா உபநிடதப் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாக இருப்பது; மாமறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள்களை எல்லாம் வெளியாக்குவது; இராமாநுசரால் மொய்ம் பால் வளர்க்கப்பட்டது 'பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்காள் இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்களாகில் தொழுமின், நீர் கொடுமின், கொள்மின் என்று நின்னொடும் ஒக்க வழிபட அருளினாய்' என்னும் மறையின் பொருளை அதுவுடான பர்யந்தமாக்கியது; பிள்ளை லோகாசா ரியர் அருளிச்