பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

செந்தமிழ் பெட்டகம்

மொழியினிடத்தில் இவருக்குள்ள பற்றினால் திருவாய் மொழிப் பிள்ளை என வழங்கப்பட்டார் பிள்ளை லோகாசாரியரிடம் பஞ்ச சமஸ்காரம் பெற்றவர் ஈடு முதலிய வியாக்கியானங்களையும், ஸ்ரீ பாஷ்ய சுருதப் பிரகாசிகைகளையும், ஆசார்யஹிருதய தத்துவத்திரயம் முதலிய ரகஸ்யங்களையும், முறையே, நாலூர் ஆச்சான் பிள்ளை, அழகிய மணவாளப்பெருமாள் நாயனார், கூரகுலோத்தம தாசர் இவர்களிடம் காலrஷேபம் கேட்டவர் கலகங்காரணமாக வெளியேயிருந்த நம்மாழ்வார் விக்கிரகத்தை மீண்டும் கொண்டு வந்து ஸ்தாபித்துக் கோயிலையும் அவ்வூரையும் புதுப்பித்தவர் ஆழ்வார்திருநகரியில் வாழ்ந்து வந்தவர் மணவாள முனிகட்கு ஆசாரியர்

மாறனலங்காரம் :

தமிழில் அணியிலக்கணத்தைத் தனியே எடுத்து விளக்கும் நூல்களில் தண்டியலங்காரத்துக்கு அடுத்துச் சிறந்த நூல் மாறனலங்காரம் இது நேரே வடமொழி நூல்களைத் தழுவி எழுந்ததன்று தமிழ்த் தண்டியலங் காரத்தையும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும் தழுவி, வழி நூலாகத் தோன்றியது.

இதன் ஆசிரியர் ஆழ்வார் திருநகரித் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற் பகுதி மாறன் என்பது நம்மாழ்வாரின் ஒரு பெயர் இந்நூலிற் காட்டப்பெற்ற பல உதாரணப் பாக்கள் நம்மாழ்வாரைப் பொருளாகக் கொண்டு இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டவை அவ்வாழ்வார் மீது கொண்ட ஆராத அன்பினால் மாறனலங்காரம் எனப் பெயர் தந்தார் தண்டியலங்காரம் போல இலக்கண விதிகளையும் அவற்றை விளக்கும் உதாரணங்களையும் பெரும்பா லும் ஆசிரியரே இயற்றியிருக்கிறார்

நூலைத் தொடங்குமுன், நன்னூலார் கூறியிருப்பது போலப் பொதுப்பாயிர, சிறப்புப்பாயிர இலக்கணங்கள் கூறப்படுகின்றன. இந்நூல், பொதுவியல், பொருளணி-