பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

289

யியல், சொல்லணியியல், எச்சவியல் என்ற நான்கு இயல்களைக் கொண்டது

இவற்றுள், பொதுவியலில், செய்யுளியல்பு, காப்பிய இலக்கணம், செய்யுள் நடை முதலிய பொதுச் செய்திகள் தண்டியலங்காரத்தினும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன பொருளணியியல், தன்மையணி முதல் பாவிக ஈறாக 64 அணிகளை விளக்குகிறது தண்டியலங்காரம் 35 அணிகளே கூறுகிறது. சொல்லிலக்கண, பொருளிலக்கணச் செய்திகள் சிலவற்றை எடுத்துப் பூட்டுவில், இறைச்சிப் பொருள், பொருண்மொழி என்ற தனித் தனி அணிகளாக இவ்வாசிரியர் கூறியிருக்கிறார் மற்ற அணியிலக்கண ஆசிரியர்கள் இவற்றை அணிகளாகக் கூறவில்லை இலக்கியங்களிற் கண்ட சில பொருள் நயங்களை அடிப்பபடையாகக் கொண்டு வகை முதலடுக்கு, இணையெதுகை, உபாயம், புகழ்வதினி கழ்தல் முதலிய அணிகளைப் புதியனவாகச் சேர்த்திருக்கிறார் இது நேரே வடமொழி நூல்களைத் தழவி எழுந்ததன்று தமிழ்த் தண்டியலங்காரத்தையும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களையும் தழுவி, வழி நூலாகத் தோன்றியது

இதன் ஆசிரியர் ஆழ்வார் திருநகரித் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மாறன் என்பது நம்மாழ்வாரின் ஒரு பெயர் இநநூலிற் காட்டப் பெற்ற பல உதாரணப் பாக்கள் நம்மாழ்வாரைப் பொருளாகக் கொண்டு இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டவை அவ்வாழ்வார் மீது கொண்ட ஆராத அதன்பினால் மாறனலங்காரம எனப் பெயர் தந்தார் தண்டியலங்காரம் போல இலக்கண விதிகளையும் அவற்றை விளக்கும் உதாரணங்களையும் பெரும்பாலும் ஆசிரியரே இயற்றியிருக்கிறார்

நூலைத் தொடங்குமுன், நன்னூலார் கூறியிருப்பிது போலப் பொதுப்பாயிர, சிறப்புப்பாயிர இலக்கணங்கள் கூறப்படுகின்றன. இந்நூல், பொதுவியல், பொருளணி

செ பெ- 19