பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

செந்தமிழ் பெட்டகம்


யியல், சொல்லணியியல், எச்சவியல் என்ற நான்கு இயல்களைக் கொண்டது

இவற்றுள், பொதுவியலில், செய்யுளியல்பு, காப்பிய இலக்கணம், செய்யுள் நடை முதலிய பொதுப் செய்திகள் தண்டியலங்காரத்தினும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பொருளணியியல், தன்மையணி முதல் பாவிகம் ஈறாக 64 அணிகளை விளக்குகிறது தண்டிலங்காலரம் 35 அணிகளே கூறுகிறது சொல்லிலக்கண, பொருளிலக்கணச் செய்திகள் சிலவற்றை எடுத்துப் பூட்டுவில், இறைச்சிப் பொருள், பொருண்மொழி என்ற தனித் தனி அணிகளாக இவ்வாசிரியர் கூறியிருக்கிறார் மற்ற அணியிலக்கண ஆசிரியர்கள் இவற்றை அணிகளாகக் கூறவில்லை இலக்கியங்களிற் கண்ட சில பொருள் நயங்களை அடிப்படையாகக் கொண்டு வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், புகழ்வதினிகழ்தல் முதலிய அணிகளைப் புதியனவாகச் சேர்த்திருக்கிறார்.

சொல்லணியியலில் மடக்கணியின் வகையும், 32 சித்திர கவிகளும் கூறியுள்ளார் அணியிலக்கணம் அவ்வவ்வாசிரியர் கொண்ட கொள்கைக்கேற்ப மேன்மேலும் பெருகி வந்திருப்பதற்கு மாறனலங்காரம் ஒரு நல்ல சான்று.

இறுதியில் உள்ள எச்சவியல் மிகச் சிறியது இது செய்யுளில் நிகழும் சில குற்றங்கள், மலைவுகள் முதலியவைகளைக் கூறுகிறது தண்டியலங்காரத்தில் இவை சொல்லணியியலிலேயே கூறப்படுகின்றன.

பாயிரம் உட்பட 327 நூற்பாக்களைக் கொண்டது இந்நூல் இதற்குத் திருப்போரை காரி ரத்தினக்கவிராயர் எழுதிய சிறந்த விரிவுரை ஒன்று உண்டு உரையாசிரியர் நூலாசிரியரின் மாணவர் இருவரும் சிறந்த வைணவர் மாணவரே உரையெழுதியதால், நூலைப் பற்றி உரையிற் கூறும் கருத்துகளை நூலாசிரியர் கருத்துகளாகவே மதிக்கலாம்.