பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

செந்தமிழ் பெட்டகம்


ஐந்திலக்கணங்களையும் ஒருங்கே கூறுவன தொல்காப்பியம், வீரசோழியம்,இலக்கண விளக்கம், முத்து வீரியம் ஆகிய நான்கு நூல்கள் இவற்றுள் தொல்காப்பிய 1610 சூத்திரங்களையுடைய, மிகவும் விரிந்த நூலாகும் வீரசோழியம், வடமொழி இலக்கணத்தை ஒப்புமை காட்டிச்செல்லும் ஒரு சுருங்கிய நூல் இலக்கண விளக்கம், பண்டைய இலக்கண நூற்பாக்களைச் சிற்சில இடங்களில் எடுத்துக்கொண்டு, 941 சூத்திரங்களையுடையதாயுள்ள பரந்த நூலாகும்.

முத்துவீரியம், 1283 சூத்திரங்களைக் கொண்ட, பழைய இலக்கணங்களின் வழியே செல்வதான ஒரு விரிந்த நூல் வீரமா முனிவர், 'பழையன கழிதலும் புதியன புகுதலும் புலமையின் மிக்கோர் விதி' (சூ 370) என அமைத்துக் கொண்டு, ஐந்திலக்கண நூல்களுள் வேண்டாத பல நீக்கியும், இக்காலத்திற்கேற்றவாறு வேண்டிய சில புதிய கருத்துகளைச் சேர்த்தும் சுருக்கமாக 370 சூத்திரங்களால் இந்நூலை முடித்துள்ளனர்

பிற இலக்கண நூல்களுள் நூற்பாவின் அடிகள் மிக்கிருக்கும் இந்நூலிலுள்ள நூற்பாவின் அடிகள் சுருங்கியனவாகவும், பொருள் எளிதில் விளங்கும்படி தெளிவாகவும் இருக்கும் எழுத்ததிகாரம் 3 இயலாக்கப்பட்டு, 40 நூற்பாவினாலும், சொல்லதிகாரம் 12 இயலாக்கப்பட்டு, 102 நூற்பாவினாலும், பொருளதிகாரம் 13 இயலாக்கப்பட்டு, 52 நூற்பாவினாலும் யாப்பதிகாரம் 3 இயலாக்கப்பட்டு, 100 நூற்பாவினாலும் அணியதிகாரம் 6 இயலாக்கப்பட்டு, 70 நூற்பாவினாலும் ஆக்கி இத்தொன்னூல் விளக்கம் முடிந்துள்ளது

இந்நூலிலுள்ள 370 நூற்பாவினுள், நன்னூலுக்குரிய 38 நூற்பாவினைச் சிதையாமல் அப்படியே எடுத்து அமைத்துக் கொண்டார் சில விடங்களில் நன்னூற்பாக்களின் வடிவத்தைச் சிறிது மாற்றி அமைத்துள்ளார் இவ்வாறே, நம்பி அகப்பொருளி-