பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

293

-லிருந்து 6 நூற்பாவினையும், இலக்கண விளக்கத்திலிருந்து 2 நூற்பாவினையும், முத்து வீரியத்திலிருந்து 2 நூற்பாவினையும், முத்து வீரியத்திலிருந்து 2 நூற்பா வினையும் எடுத்துக்கொண்டார் இன்னும், தண்டி முதலிய நூற்களிலுள்ள நூற்பாக்களிலிருந்து சில அடிகளையும் சொற்றொடர்களையும் எடுத்தமைத்துக் கொண்டுள்ளார்

ஒவ்வோர் அதிகாரத்தின் இறுதிச் சூத்திரங்களுள் அவ்வதிகாரங்களில் இன்னின்ன பொருளைக் கூறியுள்ளேன் என்று இவர் சுருக்கிக் கூறியுள்ளார் ஒவ்வோர் அதிகாரத்தின் முதலிலும் பொதுக் கடவுள் வணக்கம் அமைத்திருக்கிறார் தாமியற்றியுள்ள தேம்பாவணி முதலிய நூற்களிலிருந்து சிலவற்றை, இலக்கண விதிகளுக்கு மேற்கோளாக எடுத்தாண்டுள் ளார் பல நூற்பாக்களின் தலைப்பில், அந்தந்த நூற்பாவி லுள்ள இலக்கணப் பெயரை ஆங்கில மொழியிலும் குறிப்பிட்டிருக்கின்றார் இனி, இவர் ஒவ்வோரதி காரத்திலும் புதுமையாகக் கூறியுள்ளன. வற்றுள் ஒரு சிலவும் பிறவும் காண்போம்

எழுத்ததிகாரம்

மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறுவனபோன்று, எகர ஒகரத்திற்கும் பண்டைக் காலத்தில் புள்ளியுண்டு தொல்காப்பியரும், மெய்யினி யற்கை புள்ளியோடு நிலையல் எகர ஒகரத்து இயற்கையு மற்றே என்றார் இக்கருத்தை நன்னூலாரும் முத்து வீரியரும் தழுவினர் எகர ஒகரமாகிய உயிர்க்குற்றெழுத் திற்கும் மெய்யெழுத்திற்கும் வரும் புள்ளியின் வேறு பாட்டைக் காட்டுவதற்காக இவர், குற்றெழுத்திற்கு நீட்டல் புள்ளியை வைக்க வேண்டுமென்றும், மெய் யெழுத்திற்குச் சுழித்தல் புள்ளியை வைக்க வுேண்டு மென்றும் புதுமையாக அமைத்துக் கொண்டு நீட்டல் சுழித்தல் மெய்க்கிருபுள்ளி (சூ 12) என்று முறை