பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

செந்தமிழ் பெட்டகம்

உயிரெனில் அன்னும் வடநடையே'(சூ87) என்று கூறி, அனங்கன் அங்கமிலான் என்று காட்டுகின்றார், ‘அன்’ என்பதிலுள்ள ணகர மெய் (சிறப்பு னகரம்) தமிழுக்கே உரியது வடமொழியில் இவ்வெழுத்துஇல்லை வடமொழியில் எதிர்மறையைக் காட்டுவது ‘ந’ என்பதே இந்த நகரத்திற்கப் பின்னர் மெய்வரின் (ந + மலன்) நகரத்தின் மெய் கெட்டு அமலன்’ என்று புணரும்; உயிர் வரின் (ந + அங்கன்) நகரத்தின் மேலுள்ள (ந் + அ) அகர உயிர் முன்னாக வந்த (அ + ந்) அகங்கன் என்றாகும் என்பதே வடநூலார் கொள்கை, இக்கொள்கையைத் தழுவியே,நேமிநாதரும்,


“நேர்ந்த மொழிப் பொருளை நீக்க வருநகரம்
சார்ந்ததுதான் ஆவியேல் தன்னனாவி முன்னாகும்”

(நேமி 11)


என்று கூறியுள்ளார் இப்புணர்ச்சி விதியைச் சிறிது மாற்றிக் கொண்ட சுவாமிநாத தேசிகரும்,

“அ. அந் ...... மறையினுள் ஒன்றாகும்”

(இலக்கணக்கொத்து 100)

என்று அகரமெடுத்த தந்நகரமெய்யைக் கூறி, ‘அநங்கன் என்று மேற்கோள் காட்டினார் இங்கே, முனிவர் தமிழுக்கே சிறப்பாகவுள்ள னகரமெய்யைக்வறி வடநூலுடன் மாறுபடுகின்றார்

பண்டைத் தமிழிலக்கண அணிகள் கூறும் எதிர்மறை விதியின் கொள்கையிலிருந்து, முனிவர் வேறுபட்டுக் கூறும் எதிர்மறை விதியின் இடைச் சொற்கள் பல உண்டு;

ஏன், ஏம், ஒம், ஆய், ர, ர், ஆன், ஆள், ஆர், அ, ஆ, ஆது, ஆகியன (கு 114) எதிர்மறை ஏவலொருமை விகுதிகள் என்றும்,

ஏல், அல், அன்மோ, அற்க என்பன (கு 14 எதிர்மறை ஏலலொருமை விகுதிகள் என்றும்,