பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

297


ஆமின், அன்மின், அர்பீர் என்பன (சூ 121) எதிர்மறை வினையெச்ச விகுதிகள் என்றும் கூறுகின்றார்

முனிவர் பிறிதோரிடத்தில், அன்மை, இன்மைகளைப் பற்றிக் கூறும்போது (சூ126) அதன் உரையில், ‘ஒன்றன் இயல்பு மறுக்கும் அன்மையும், ஒன்றன் இருப்பு மறுக்கும் இன்மையும்’ என்று கூறியுள்ளது நாம் போற்றுதற்குரியது இவ்வாறே, பல புதிய கருத்துக்களைக் காட்டிச் சொல்லதிகாரத்தைச் சுருக்கமாக முடிக்கின்றார் முனிவர்

பொருளதிகாரம் :

இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில்,இறை வணக்கம் கூறுமிடத்து (கு 143) முத்துவீரியர் கூறியுள்ள இறை வணக்கப் பாவினை (முத்து பொருள் 1) அப்டியே எடுத்தமைத்துக் கொண்டார் முனிவர் பின்னர் பொருளதி காரத்தைத் தொடங்குமுன், பொருள் நூலைத் தந்த செந்தமிழுணர்ந்தோர், அகப் பொரு ளெனச் சிற்றின்ப மொன்றையும், புறப் பொருளெனச் சேவகமொன்றையும் விரித்துரைத்தார் யான் அங்ஙனங் கூறாமல், அறமுதல் நான்கிற்கேற்ப இப்பொருளதி காரத்தைக்கூறத் தொடங்குகின்றேன்’ என்று (கு 144) உரையில் கூறுகின்றார் ஆகையால், அகத்திணை, புறத்திணை களைக் குறித்துப் பண்டைத் தமிழ் நூலோர் சென்றவாறு செல்லாமல், அவற்றை மாற்றி அமைத்துக் கொண்டனர் இவ்வாசிரியர்

முதற்காரணம், நிமித்தகாரணம், துணைக்காரணம், ஆகிய மூன்று காரணமாகப் பல தமிழ்ப் புலவரும், பத்துக்காரணமாகச் சுவாமிநாததேசிகரும் (இலக்கணக் கொத்து 34) கொண்டனர் மேற்கூறிய மூன்று காரணத்தோடு குறிப்புக் காரணமொன்றைச் சேர்த்து, இவற்றாலுண்டாகும் காரியம் நான்கினையும் கூட்டி,

செ பெ- 20