பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

செந்தமிழ் பெட்டகம்

‘ஆடவர் மயிரும் முசுவும் ஓரி’

‘காடும் கூடும் கட்சியாகும்’

என்பவை அந்தத்துப் பொருள் பற்றியவை இங்ஙனமே பிங்கல நிகண்டை அச்சியற்றிய சிவன் பிள்ளை என்பாரும் ஒருசொல் பல்பொருட் பெயர்த் தொகுதியில், பிங்கலர் வகுத்த முறையைத் தவிர்த்துச் சொற்களை அகராதிக் கிரமத்தில் நிறுத்தி, அவற்றிற்கு உரிய சூத்திரங்களையும் அம்முறையிலேயே முறைப்படுத்தியுள்ளனர் இவையெல்லாம் அகராதி போன்று எளிதில் நிகண்டைப் பயன்படுத்தச் செய்த முயற்சிகள்

மேற்குறித்த இரண்டு நூல்களிலும் செய்த மாற்றங்கள் பிற்காலப் பதிப்பாசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டவை அவற்றின் ஆசிரியர்களோ எதுகை நயத்தால் சொற்பொருளையே நினைவூட்ட முயன்றனர் எதுகை முறையில் ககர எதுகை, சகர எதுகை, முதலியனவாகப் பாகுபாடு செய்து, இம்முறையில் சொற்களை எளிதில் காண முயன்றவர் சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டலபுருடர் இவர் அமைத்த வகையில் ஓர் எதுகையில் பிற எதுகைச் சொல் விரவிவருதலும், செய்யுளுக்காக வேண்டாத அடை மொழிகளைப் புணர்த்தலும் ஆகிய குறைபாடுகள் உள்ளன. ஒரு செய்யுளுக்கும் வருஞ் செய்யுளுக்கும் ஓர் இயைபு இன்றியும் அமைந்துள்ளது எனவே, இந்நிகண்டினைக் கற்றோர் கலப்பு எதுகைச் செய்யுட்களைத் தனிப்படப் பிரித்தும், பிறவற்றை ஆதியிற் பொருள் அந்தத்துப் பொருள் எனப் பாகுபடுத்தியும் உள்ள முறை சிற்சில பிரதிகளில் உள்ளன

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதகிரியார் என்பவர், சூடாமணியிற் கூறப்பெறாத ஒருசொல் பல்பொருட் பெயர்களையெல்லாம் தொகுத்து, இந்நிகண்டில் 11ஆம் தொகுதியிலுள்ள 310 செய்யுட்களோடு இடையிடையே எதுகை முறை பற்றிப்