பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

299


4. யாப்பதிகாரம் :

முன்னோர் செய்யுளியல் கருத்துகளுள் பலவற்றை எளிய நடையில் விளக்குகின்றார் முனிவர் ஆங்காங்கு உரைப்பகுதிகளில், பல்காயனார், கையனார், காக்கைப் பாடினியார், நற்றத்தனார் முதலிய பல ஆசிரியர் கருத்துக்களை மேற்கோள் காட்டுகின்றனார் தொல்காப்பியச் செய்யுளியலின் உரையில் பேராசிரியர் எடுத்துக் காட்டுவதும், முத்துவீரியத்தில், ’இருகுறள் சவ்லை ஒருவிகற்பாகும்’ (முத்து-யாப்பு-செய்8) என்று கூறப்படுவதுமாகிய சவலை வெண்பாவிற்கு ’இருகுறள் ஒரு விகற்பத்தான் வருவது சவலை வெண்பாவாகும்’ (சூ 222) என இலக்கணங்கூறி, அதன் பொருளை விளக்கிக் கூறுகின்றார்

வடநூலார், பாவொடு, பாவினத்தை, ‘பத்தியம்’ என்பர் என்றும், அவையில்லாமல், ‘கொன்றைவேந்தன்’ என்பது போன்ற பாவின் நடைபோல வருவனவற்றைக் ‘கத்தியம்’ என்பர் (சூ 256) என்றும் முனிவர் கூறுகின்றார் காப்பிய இயல்பைக் கூறும் பகுதியில், ‘புராணம்’ என்பதை விளக்கும்போது ’பலகதைகளைப் புனைந்துரைப்பது புராணமாகும்‘ (சூ 255) என்கின்றர் வச்சணந்திமாலையில் வரும் பாட்டில் பொருட்களையும் இலக்கண விளக்கத்தில் வரும் பாட்டின் கருத்துகளையும் தழுவி, இறுதியில் 'செய்யுள் மரபியல்’ எனப் பெயரிட்டு, அவற்றின் பொருளைத் தெளிவாக விளக்கி யாப்பதிகாரத்தை முடிக்கின்றனர் இவ்வாசிரியர்

அணியதிகாரம்:

நன்னூலில் கூறியுள்ள எண்வகைப் பொருள் கோளையும், பத்துவகை எச்சங்களையும் எடுத்தமைத்துக் கொண்டு, அவ்விரண்டினையும் முறையே, ‘மறிநிலையணி’ (சூ 304) என்பர் முனிவர் தண்டியாசிரியர் கூறியுள்ள 35 வகைப்பட்ட பொருளணிகளுள்