பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிள்ளைப்பாட்டும்
பிள்ளைத்தமிழும்

து தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்களிலே ஒன்று இது பிள்ளைக் கவியென வழங்கப்படுதலை வெண்பாப் பாட்டியலாலும், பிள்ளைப் பாட்டென வழங்கப்பட்டிருத்தலைப் பன்னிரு பாட்டியலாலும் அறிகிறோம் 'குழவி மருங்கிலும் கிழவதாகும்’ என்ற தொல்காப்பிய சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் அமைந்ததென்பர் மருங்கென்றதனால் மக்கட் குழவியாகிய ஒரு மருங்கே கொள்ளப்படும் தெய்வக் குழவியின்மையின்’ என எழுதப்பட்டிருந்தும், கடவுள ரையும் கடவுட் பெண்டிரையும் குழவிப் பருவத்தினராகக்கொண்டு பிற்காலத்தே பிள்ளைத் தமிழ் நூல்கள் பல எழுந்தன. இந் நூல் ஆண்பாற்பிள்ளைத் தமிழென்றும், பெண்பாற் பிள்ளைத் தமிழென்றும் இருபாற்படும்

தாங்கள் போற்ற விரும்புபவரைக் குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாராட்டுவது இதன் இலக்கணம் இந்நூலில் மூன்று மாதம் முதல் இருபத்தோராம் மாதம் வரை ஒற்றித்த மாதமாகிய பத்து மாதங்களிலும் பத்துப் பருவங்களைச் சிறப்பித்துப் பாடுவர் குழந்தைகள் மூன்றாம் ஆண்டினும், ஐந்தாம் ஆண்டினும், ஏழாம் ஆண்டினும் கேட்பிக்கினும் இழுக்காகாதென்று பன்னிரு பாட்டியலும், குழந்தையின் ஐந்தாம் ஆண்டினும், ஏழாம் ஆண்டினும் பாடினும் இழுக்காகாதென்று வெண்பாப் பாட்டியலும்