பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

செந்தமிழ் பெட்டகம்


தெரிவிக் கின்றன. மற்றும் ஆண்பாற்காயின் பதினாறு ஆண்டள வும், பெண்பாற்காயின் பூப்பு நிகழும் வரையி லும் கேட்பித்தல் இழுக்காகாதென்பது இந்திரகாளியர் மரபு எனினும் அரசன் இளையனாயினும் முடி சூடிய பின் பிள்ளைக்கவி பெறலாகாதே என்பதைத் 'தொன்னிலை வேந்தர் சுடர்முடி சூடிய பின்னர்ப் பெறா அர் பிள்ளைப் பாட்டே' எனப் பன்னிரு படல மேற்கோட் சூத்திரம் ஒன்று வலியுறுத்துகின்றது.

தொல்காப்பியர் கூறிய வனப்பு எட்டனுள் ஒன்றாகிய விருந்தைப் பொதுவிதியாகக் கொண்டே பல பிரபந்தங்கள் எழுந்தன. அந்நிலையாக இந்நூல் ஆசிரிய விருத்தத்தை நான்கு அடியாக ஒப்புக்கொண்டு, வண்ணவிருத்தய அதாவது ஒரடிக்குப் பதினாறு கலை வகுத்து, இவ்வாறாக நான்கடிக்கும் அறுபத்து நாலு கலை வகுத்துப் பாடுவதாகும் இவ்வாறு பொய்கையார் களவியல் தெரிவிக்கிறது பிள்ளைப்பாட்டு நெடுவெண் பாட்டாய் வருதல் வேண்டுமென்பதைப் புலவர்கள் தெளிவாகக் கூறியிருத்தலைப் பன்னிருபாட்டியல் குறிக்கக் காண்கிறோம் ஆனால், அவ்வாறமைந்த நூலொன்றும் வழக்கிலில்லை.

சந்தப்பாக்களால் விரவி வருகின்ற இந்நூலின் பத்துப் பருவங்களையும் பாடவேண்டிய முறைமையை நோக்குமிடத்துக் காப்புச் செய்யுளை ஒன்பதாகவேனும், பதினொன்றாகவேனும் பாடுதல் வேண்டுமென்பதும், பருவங்கள் பத்தையும் தம்மில் ஒப்புக் கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்படப் பாடுதல் சிறப்புடைத் தென்றும், இரட்டிக்கப் பாடின் ஓசை பெயர்த்துப் பாடுதல் வேண்டுமென்பதும் வரையறை இவ்வரையறையை மீறிப் பருவத்திற்கான பாட்டுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துப் பாடிய நிலையையும் பருவ எண்ணிக்கையை மிகுத்துப் பாடிய நிலையையும் காண்கிறோம்.

ஒவ்வொரு பருவத்திற்கும் எவ்வேழு பாடல்களையுடையதாகச் சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்