பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

305

என அமைத்து, இது குழந்தைகள் மழலையைக் காட்டிலும் இளமைப் பருவத்தையுடையதான பொருள் தெரியாத ஒலியை எழுப்பும் பருவத்தைக் குறிப்ப தாகுமென ஒரு சாரரும், 'ஆடுக செங்கீரை’ எனும் செய்யுள் வழக்கைக் கொண்டு, குழந்தை ஒரு காலை முடக்கி, ஒரு காலை நிமிர்த்தி, இரண்டு கைகளையும் நிலத்திலுன்றி, முகத்தை மேல் நிமிர்த்தாடுதலாகிய பருவத்தைக் குறிப்பதாகுமெனப் பிறிதொரு சாராரும் கூறுவர்

மேற்கூறியவாறு ஆடுகின்றபொழுது சுற்றத்தார் செவ்விய சொற்களைச் சொல்ல வேண்டு மென்று வேண்டிக் கொள்வதாக இரண்டு கருத்துக் களையும் சேர்த்து அமைப்பாரும் உண்டு குழந்தை தலையெடுத்து முகமசைத்தாடும் நிலையையே பெரிதும் கூறுவர் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழிலும், மங்களாம்பிகை அம்மை பிள்ளைத்தமிழிலும் இரண்டு கருத்துகளையும் வைத்துப் பாடப்பட்டிருத்தலைக் காண்கிறோம்

மூன்றாவது தாலப்பருவம், ஏழாம் மாதத்து நிகழ்வது கூறுவது தாலாட்டென்பது தாலென மருவி வழங்கியது குழந்தைகளைத் துயிலச் செய்வார் தம் நாவை அசைத்தலும், பாட்டுப் பாடுதலும் வழக்கம் 'தாலே தாலேலோ’ என்னும் சொல்லிறுதியுடன் இப்பருவச் செய்யுட்கள் முடிகின்றன தாலாட்டென்பது தனியான பிரபந்த நூலாகவும் வழங்குகிறது

நான்காவது சப்பாணிப் பருவம், ஒன்பதாம் மாதத்து நிகழ்வது கூறுவது குழந்தையைக் கையோடு கை சேர்த்துக் கொட்டும் விளையாட்டாகிய சப்பாணி கொட்டும்படி வேண்டுவது

ஐந்தாவது வருகைப்படுவம் பத்தாம். பதினோரம் மாதம் வருவது தவழ்ந்து, நிமிர்ந்து நிற்க வழகும்