பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

செந்தமிழ் பெட்டகம்

பருவமிது இதனை வருகைப் பருவமெனவும் வழங்கப்படுகிறது

ஆறாவது வருகைப்பருவம், பதின்மூன்றாம் மாதத்து நிகழ்வது கூறுவது தளர் நடையிட்டு வரும் குழந்தையை வாவென்று அழைப்பதாகக் கூறுவது இது வாரானைப் பருவமெனவும் வழங்கப்படுகிறது

ஏழாவது அம்புலிப் பருவம், பதினைந்தாம் மாதத்து நிகழ்வது கூறுவது மதியைக் குழந்தையோடு விளையாட வாவென்று அழைத்தலைக் கூறுவது இப்பருவம் ஏனைய பருவங்களினும் பாடற்கரிய தென்பதைப் ‘பிள்ளைக் கவிக் கம்புலியாம்’ என்ற பாடலடி விளக்குகிறது அவ்வாறு மதியை அழைக்கின்ற போது சாம, பேத, தான, தண்ட வகையால் முறையே அம்புலிக்கும் பாட்டுடைத் தலைவர்க்கும் ஒப்புக் கூறுதலும், வேற்றுமை கூறுதலும், வரின் விளையும் நன்மை கூறுதலும், வாராவிடின் நிகழும் துன்பம் கூறுதலும் மரபு சாம மென்பதற்கு இன்சொல் என்று பொருள் கொண்டு பாடுதலாகிய மரபையும், அதுவும் ஒப்பிலடங்கும் நிலையையும் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழிலே விரிவாகக் காணலாம் முதன் மூன்று முறையிலே பொருந்தாதாரையே தண்ட முறையில் வைத்துப் பாடுவரென்பர் ஒரு சாரார் வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழில் தான, தண்டம் எனும் இரு முறையே வைத்துப் பாடப்பட்டுள்ளது

இவ்வேழு பருவங்களும் இருவகைப் பிள்ளைத் தமிழுக்கும் பொது அடுத்த மூன்று பருவங்களுக்கு ஆண்பாற் பிள்ளைத் தமிழில் சிற்றிற் பருவமும், சிறுதேர்ப் பருவமும் சிறுபறைப் பருவமும் பாடப்படும் சிற்றிற் பருவத்துச் சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர் பாட்டுடைத் தலைவர் சிற்றிலை அழிக்கின்ற போது, 'எமது சிற்றிலை அழியாதொழிக’ எனப் பாடுவர் சிறுபறைப் பருவத்துப் பாட்டுடைத் தலை