பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

307

வரைச் சிறுபறை முழக்கும்படியும், சிறுதேர்ப் பருவத்துச் சிறுதேருருட்டும்படியும் பாடுவர்

இனி, வெண்பாப் பாட்டியலும் நவநீதப் பாட்டியலும் பெண்பாற் பிள்ளைத் தமிழில் சிற்றில் சிதைத்தல் முதலான மூன்றனையும் பாடுதலாகாதென்று கூறிய மைந்தன அம்மூன்றற்கும் நிகராகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பவைகளைக் கொள்க என்று சிதம்பரப் பாட்டியலும் இலக்கண விளக்கப் பாட்டியலும் கூறுகின்றன

பன்னிரு பாட்டியல், சிற்றிலிழைத்தல் சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமவேள் நோன்பு போன்றவை பெண்பால் நூலுக்கு உரியவை எனக் கூறுகின்றது, பிங்கலந்தையென்னும் நூல் குழமணம், நோன்பு, நீராடல், பாவையாடல், அம்மானை, கழங்கு, பந்தடித்தல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலா டல் என்பவை பெண்பால் நூலில் வைத்துப் பாடுதற்குரியன என்கிறது

பெரும்பாலான பிள்ளைத் தமிழ் நூல்களில் அம்மானை, நீராடல், ஊசல் போன்றவைகளே வைத்துப் பாடப்பட்டுள்ளன சிவயோக நாயகி பிள்ளைத் தமிழிலே கழங்காடுதலும், ஆண்டாள் பிள்ளைத் தமிழிலே காமவேள் நோன்பும் வைத்துப் பாடப் பட்டுள்ளன

இவ்வாறு கூறப்படும் இலக்கண வரையறைகளில் ஒத்த, முடிபில்லாத இப்பிள்ளைத்தமிழ் இலக்கியம் தமிழிலக்கிய உலகிலே இடைக்காலத்தே தோன்றி, இக்கால வரையிலே நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கக் காண்கிறோம் முதல் நூலாகக் கிடைக்கும் ஒட்டக் கூத்தரின் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழைத் தோற்றுவாயாகக்கொண்டு, குமரகுருபர சுவாமிகளின் மீனாட்சியம்மை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூல்களாலும், சிவஞான சுவாமிகளின் அமுதாம் பிகையம்மை பிள்ளைத் தமிழ் நூலாலும், பகழிக் கூத்தரின் திருச்செந்துர்ப் பிள்ளைத் தமிழ் நூல்களாலும்