பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

309

பழம் பாடற் றொடையின் பயனே’ என்ற பாட்டைப் படித்தின் புறாத தமிழறிஞர்களே இருக்க முடியாது பொருளாழமும், உள்ளத்தை வயப்படுத்தும் இன்தமிழ் நடையும் பயின்று வரும் இது போன்ற செய்யுட்களை இந்நூலில் பலவிடத்தும் காணலாம் அம்மையிடத்துச் சிவனடியார் ஈடுபடும் திறத்தையும், அம்மை அவரது உள்ளத்துப் பெருக்கெடுத்தோடும் பேரானந்த வெள்ளமாயமையும் நிலையினையும், முத்தப் பருவத்தமைந்த, “உருகி யுருகி நெக் குடைந்து’ என்ற பாடலில் அழகாகக் கூறுகிறார் கற்பனைகளமைத்துப் பாடுவதில் வல்லவரான ஆசிரியர் தெய்வங்களைப் பற்றியும் கற்பனை செய்து பாடும் திறத்தை முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் வருகைப் பருவத்து, ’மழவு, முதிர் கனிவாய்ப் பசுந்தேறல்’ என்ற பாட்டிலே காணலாம் மற்றும் முருகன் ஆதிப்பிரானயிருந்தும், வள்ளியம்மையின் ‘தேனூறு கிளவிக்கு வாயூறி நின்ற” திறத்தைச் செங்கீரைப் பருவத்தமைந்த, ’மீனேறு குண்டகழி’ என்ற பாட்டிலே சுவை ததும்பப் பாடுகின்றனர் இன்னும் ஆசிரியர் கையாளும் உவமைகளும் அணிகளும் நூலுக்குப் பெரிதும் சுவை தந்து நிற்கின்றன

பகழிக் கூத்தரியற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழை, ‘இது பிள்ளைத் தமிழாயினும் பெரிய தமிழ்’ எனப் பாராட்டுகின்றனர் இவர் வைணவராக இருந்தும், இந்நூலைப் பாடித் தமது தீராத வயிற்று நோயைத் தீர்த்துக்கொண்டாரென்பது வரலாறு இந்நூலில் சொற்சுவையும், பொருட்சுவையும், பலப்பல சந்தச் சுவைகளும், கற்பனை, அலங்காரம் முதலிய பல நயமும், பக்திப்பெருக்கும் சிறந்திருக்கக் காண்கிறோம் தமது நூலின் முத்தப் பருவத்து முதற் பாடலில் ‘வலம்புரிகள் ஈன்ற முத்திற்கும், மருப்பில் விளை முத்திற்கும், நெற்பயிரின் குளிர் முத்தினுக்கும் விலையுண்டு முருகா,