பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

39

முற்றிலும் விளக்குவதில்லை இம்மாதிரியான இலக்கணம் சக்கரம் போல் சுற்றி வருவதேயன்றி எதையும் விளக்குவதில்லையாதலால் இதை ‘இலக்கணச் சக்கரம்' என்று கூறுவார்கள்

ஆயினும் ‘மூன்று கோணங்களுடையது முக்கோணம்’, மரத்தினால் செய்த பெட்டி மரப்பெட்டி’ என்பவற்றிலும் பொருளின் பதம் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் தவறில்லை முக்கோணம் என்பதற்கும் மரப்பெட்டி என்பதற்கும் தனிப் பெயர்கள் இல்லையாதலால் கோணம் என்பதையும் பெட்டி என்பதையும் உபயோகிப்பது இழுக்காகாது

5 இலக்கணத்தை உடன்பாட்டு முறையில் கூற முடியும் இடங்களில் எதிர் மறை முறையில் கூறலாகாது ஏனெனில் இலக்கணத்தின் நோக்கம் ஒரு பொருள் இத்துணையது என்று கூறுவதேயன்றி, இத்துணைய தன்று என்று கூறுவதன்று ‘தர்மம் அதர்மமல்லாதது’, ‘வாயு உருவமல்லாதது' என்று கூறினால் எதுவும் விளங்குவதில்லை

ஆயினும் சில பொருள்களின் இலக்கணத்தை எதிர் மறை முறையிலேதான் கூற முடியும் உதாரணம் , ‘பிரமசாரி மணமாகாதவன்', 'அந்நியர் நமரல்லாதவர்’

சில பொருள்களின் பதங்கள் எதிர்மறை முறையில் இலக்கணம் கூற வேண்டும் என்பதில்லை 'பொறாமை’ என்பதற்குப் 'பிறர் நலம் கண்டு புழுங்குதல்’ என்று உடன்பாட்டு முறையில் இலக்கணம் கூறலாம்.

இலக்கணத்தில் வரையறைகள் .1 அறிவு வளர வளர இலக்கணம் மாறிவரும் இயல்புடையதாகும் வெப்பம் என்பது பொருள்களிலிருந்து வந்து நம் புலன்களைத் தாக்கும் தூள்கள் என்று 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதற்கு இலக்கணம் கூறினார்கள் ஆனால் அது பொருளிலுள்ள மூலக்கூறுகளின் அதிர்ச்சியே என்று இப்பொழுது கூறுகிறார்கள்