பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

செந்தமிழ் பெட்டகம்

6. தனக்கு மேலே சாதியில்லாத சாதிக்கும் அசோகர் போன்ற இடுகுறிப் பெயர்களுக்கும், பொருள்களின் தனி இயல்புகளுக்கும் இலக்கணம் கூற முடியாது ஒருவாறு வருணனை மட்டுமே செய்யலாம்

7 காலம், இடம், எண்ணம் போன்ற மூலப்பதங்களுக்கும், பொருள் என்ற பொதுவுக்கும் சம்பிரதாய முறையில் இலக்கணம் கூற இயலாது இவற்றிற்கு மேல் சாதியைக் குறிப்பது எளிதன்று

இந்த இடர்ப்பாடுகளைக் கருதியே விஞ்ஞானிகள் ஒரு பொருளுக்கு இலக்கணம் சொல்வதற்கு 'அமைப்பு முறை இலக்கணம்’ என்பதைக் கையாளுகின்றனர் ஏதாவது ஒரு அமைப்பிலே, ஒரு திட்டத்திலே ஒரு பொருளுக்கு இன்ன இடம் என்று வகுத்துக் காட்டுவதே அப்பொருளுக்கு இலக்கணம் கூறுவதாகும் இதன்படி உலகு முழுவதுமே ஓர் அமைப்பு அதற்குள் பல சிறிய அமைப்புகள் உண்டு ஒன்றோடும் இயைபு படாமல் எந்தப் பொருளும் இல்லை இந்தப் பொருள் எந்தத் திட்டத்திற்குட்பட்டது என்று காண்பதே விஞ்ஞானத்தின் முக்கிய வேலை இதைக் கண்டவுடனே அப்பொருளின் முக்கிய வேலை இதைக் கண்டவுடனே அப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லியாயிற்று இந்த முறையின்படி எந்தப் பொருளுக்கும் இலக்கணம் கூறலாம் இலக்கணம் சொல்லமுடியாத பொருள் ஒன்றுமில்லை என்பது விஞ்ஞானிகள் மதமாகும் (கி ர அ)

இலக்கணம்

இலக்கணம் என்பது சிறப்பியல்பு இலக்கணம் கூறப்பெறுவது எதுவோ, இலக்கணம் உடையது எதுவோ அஃது இலக்கிணம் எனப் பெயர் பெறும் எடுத்துக்காட்டாக, மண்ணுக்கு இலக்கணம் கூறப்புகுந்தால், மண் இலக்கியமாகும் இலக்கணம் பெற்று விளங்கும் இலக்கியத்தின் தன்மை இலக்கியத் தன்மை