பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

செந்தமிழ் பெட்டகம்

புதிய மொழிகளாக வழங்கிவருகின்றன. ஆகையால் ஒரு மொழியின் இலக்கண மரபுகொண்டு மற்றொரு மொழியின் இலக்கணத்தினை விளக்குவது தக்கதன்று லத்தீன் இலக்கணமே ஆங்கில இலக்கணம் என்று பல நாள் ஆராய்ந்தவர் உண்மை காணாது மயங்கினர் வடமொழி இலக்கணமே தமிழிலக்கணம் என்ற ஆராய்ச்சியும் இத்தகையதே.

‘சொற்கள் வாக்கியமாகிக் கருத்தினை எவ்வாறு விளக்கி வருகின்றன என்பதனை ஆராய்வதே இலக்கணம்’ என மேனாட்டில் வழங்கி வருகிறது வடமொழி வியாகரணமும் இத்தகைய ஆராய்ச்சியே ஆகும் ஆனால், தமிழர் ஐந்திலக்கணம் எனக் கூறிவருகின்றனர் எழுத்தின் ஓசை, மாத்திரை, புணர்ச்சி மாற்றம் முதலியவற்றை ஆராய்வது எழுத்திலக்கணம், சொற்கள், பெயர், வினை, இடை, உரி என்ற பாகுபாட்டோடு பலவாறு சொற்றொடராக இயைந்து வரும் மரபுகளை ஆராய்வது சொல்லிலக்கணம் இலக்கியங்களில் வரும் பொருள் பாகுபாட்டினை அகம் என்றும், புறம் என்றும் முறை செய்வது பொருள் இலக்கணம் தமிழ் இலக்கணம் இந்த மூன்று பிரிவாகமட்டும் அமைந்தது தொல்காப்பியக்காலம் இந்த பொருள்களைப் பாட்டாகவும் உரைநடையாகவும் கூறும்போது இலக்கியம் செய்யுளாக வரும்; செய்யுளின் அமைப்பு முறையைத் தனியே ஆராய்வது யாப்பிலக்கணம் இந்த நான்கு பிரிவாகத் தமிழ் இலக்கணம் அமைந்த காலம் இறையனார் அகப் பொருளுரை காலம் எனலாம் வடநூல் ஆராய்ச்சியின் பயனாக உவமை முதலிய அலங்காரங்களை ஆராய்ந்தவர்கள் அணி இலக்கணம் என ஐந்தாம் பிரிவில் கூறிய காலம் தண்டியலங்காரக் காலம் எனவாம்

பிற நாட்டிலும் இப்படிப் பலவற்றையும் இலக்கணத்துள் அடக்கியதுண்டு டைனீஷியஸ் என்ற ரோமானிய அறிஞர் எடுத்தல், படுத்தல் முதலிய இசை