பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

43

வேறுபாடு கூறும் ஒலி இலக்கணமும், சொற்பொருளை விளக்கம் சிறப்பியல் இலக்கணமும், அணிகளை விளக்கும் அணி இலக்கணமும் கூறுவர் அவர், “கற்ற எழுத்தாளரோடு செயல்முறை வகையால் நம்மை அறிமுகம் செய்வதே இலக்கணம்” என்பர்.

இலக்கண மாறுபாட்டுக்கு அடிப்படையாகாத ஒலியியல் நாம் கூறிவரும் இலக்கண விதியாவது இல்லை சொற்பொருள் கூறுவது அகராதியும் நிகண்டுமே அன்றி இலக்கண நூலன்று அணி இயல் அலங்கார சாத்திரமே அன்றி இலக்கண நூலன்று பொருள் பாகுபாடு இலக்கண ஆராய்ச்சியாதலின் அதுவும் நாம் வழங்கும் இலக்கணமாவதில்லை இதனால் எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் மட்டுமே நன்னூலும் தொன்னூலும் கூறுகின்றன

சொல், சொற்றொடர் இவற்றின் இயைபுகளை விளக்கும் முறை அல்லது மரபினை ஆராய்வதே இலக்கணம் 1 சொற்றொடரில் சொல் நிற்கும் இடம் : (இராமன் சோறு தின்றான்” என்பதில் முதலில் நிற்பதனாலேயே இராமன் எழுவாய்: இரண்டாவது நிற்பதாலேயே 'சோறு’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு இன்றியும் செயப்படுபொருளாம்) 2 ஒலி வேற்றுமை (“அவன் வந்தான்; வந்தான் போனான்” என்பதில் முதலிலுள்ள வந்தான் என்னும் சொல் பக்தியில் எடுத்தலோசை பெற்றுப் பயனிலையாம்; இரண்டாவது உள்ள வந்தான் என்னும் சொல் விகுதியில் எடுத்தலோசை பெற்று எழுவாயாம் 3 சொல்லமைப்பு : 4 சொல்லுருபு மாற்றம் (இராமன், இராமனால் எனக் காண்க துணைச்சொற்களோடு வாள் கொண்டு என வருதல் காண்க) இவை சொற்கள் ஒன்றோடொன்று எழுவாய், பயனிலை முதலியவையாய் இயைந்துவரும் இயைபினை விளக்குகின்றன. இவற்றை “வந்தான்” போல வரும் சொல்லமைப்பு அல்லது