பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

47

இந்திய ஐரோப்பிய மொழியாராய்ச்சி அந்தக் குடும்ப மொழிகளைப் பற்றிச் சில உண்மைகளைக் கண்டுள்ளது சொற்களை அவற்றின் அடிப்படைச் சொற்களாகப் பிரிக்கலாம்

இந்த அடிச் சொற்கள் இரண்டு வகை: முதல் ஒத்திருப்பன ஒருவகை; இவையே பகுதிகள் எனலம் கடை ஒத்திருப்பன மற்றொருவகை; இவையே விகுதி முதலிய இடைச் சொற்கள் ஆம் பகுதிகளோ கருத்துகளை விளக்கும்; இடைச் சொற்களோ இலக்கண இயைபினை விளக்கும்; சொற்றோடரில் சொல் அமைந்த இடமும் இந்த இயைபினை விளக்கும் நாளடைவில் பழக்கத்தால் சில சொற்கள் சில இடத்தில் மாறாது வரும் அல்லவா? இடைச் சொற்கள் முதலில் தெளிவின்றியும், வரையறை இன்றியும் வந்திருக்கும் வழக்காற்றில் பயின்றுவருதல் காரணமாகப் பின்னர் வரையறை ஏற்பட்டிருக்கும்

இவற்றில் ஒரு சில இலக்கணக் கருத்தினை மட்டும் விளக்கலாம்; வேறு சில பெயர்வினை என்ற சொற்பாகுபாட்டுக் குறிகளாக வந்திருக்கலாம். இதனாலேயே ஒரே உருபு பல பொருளில் வரக் காண்கிறோம் இவற்றில் ஒரு சில தொடக்கத்தில் இருந்தே இடைச்சொற்களாக இல்லாமல் பொருளுள்ள சொற்களாக வழங்கிவந்து, பின்னர் நாளடைவில் பொருளிழந்து, தேய்ந்து, உருபாகவும் வெறும் உயிர் ஒலியாகவும் நின்று விட்டிருக்கலாம்

இம்மொழிகளில் எட்டு வேற்றுமைகள் உண்டு. எழுவாய், செய்பபடு பொருள், விளி என்ற் மூன்றும் வல் வேற்றுமைகள் ; பிற எல்லாம் மெல் வேற்றுமைகள்; பின்னவையே பெயரடையும், வினையடையும் ஆயின. இவ்வுருபுகள் பின்னர் முந்தமை சொல்லாக மாறின. 12,6 ஆம் வேற்றுமைகள் இலக்ண நெறி வேற்றுமைகள்; 3,5,7 ஆம் வேற்றுமைகள் தருக்க நெறி வேற்றுமைகள் இந்த