பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

செந்தமிழ் பெட்டகம்

மொழிகளில் வரும், இருமை எண் பன்மையிலும் பழையது இங்கே ஆண், பெண், அலி என்ற இலக்கணப்

பால் பாகுபாடு சொற்களின் ஒப்புமை நயத்தால் எழுந்தது என்பர் பால் பாகுபாடு இல்லாத காலமும் உண்டு 'செய’ என் வினையை ஆராய்ந்தால், பெயர், வினை என்ற பாகுபாடு இல்லாத காலமும் உண்டு எனத் தெரிகின்றது இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற காலக்கருத்தும் நாளடைவில் நுழைந்ததே வினைச் சொல்லின் முதல் எழுத்தினை இரட்டுவித்துக் காலம் காட்டுதல் பழைய முறை இம்மொழிகளில் செயப்படுபொருள், வினை, செய்வோன் என வாக்கியம் அமைந்து வந்தது

இந்த உண்மைகள் பிறமொழிகளுக்கும் ஒத்து வருமா என்பதே இன்றைய ஆராய்ச்சி தமிழிலக்கணம் ஒரு வகையில் பொது இலக்கணம் எனலாம் கருத்தினை விளக்கும் கூற்றோ, முடிபோ, ஏதேனம் ஒன்றைப் பற்றிக் கூற முன்வருவது எதுவோ அதுவே எழுவாய், அதனைப் பற்றி ஏதாவது ஒன்று கூறுவது எதுவோ அதுவே பயனிலை தமிழ் இலக்கணம் எழுவாயைப் பெயர் என்றது; பயனிலையை வினை என்றது, அவ்வளவே இங்குள்ள பாகுபாடு பிற சொற்கள் எல்லாம் பெயரின் அடையாகவும் வினையின் அடையாகவும் நுழைந்து, எழுவாயும் பயனிலையுமாகவே முடியும் பெயர், வினை என்ற இரண்டு சொற்களைப் பிாத்து ஆராய்ந்தால், பொருளுக்கு உரிமையான அடிப்டைப் பகுதிகள் ஒருபுறம் நிலைத்துள்ளன

காலம், இடம், பால், வேற்றுமை முதலிய இலக்கண இயைபினைக் காட்டும் விகுதி, இடைநிலை, வேற்றுமையுருபு முதலிய இவை மற்றொரு புறம் பிரிகின்றன பகுதியே உரிச் சொல், விகுதி முதலியன இடைச்சொல் இவ்வளவே தமிழ் இலக்கணம், பிறமொழிச் சொற்களும் திசைச்சொற்களும் தமிழ்