பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

53

ஆகவே, ஒருவன் தன்னுடைய அனுபவத்தைக் கற்பனை மூலம் எண்ணிப் பார்த்து, அதைச் சொற்கள் மூலம், செய்யுள் நடையினாலோ உரைநடையினாலோ பிறர் உள்ளத்திலும் எழுமாறு அழகுபடச் செய்வதே இலக்கியமாகும்.

பாட்டியல் : இலக்கணங் கூறிற்று. பொருளிலக்கணம் என்ற பகுதியில் அந்நூல் அடங்கிய யாப்பு, அணி என்பன வற்றைத் தனிப் பிரிவுகளாகக் கொண்டு, பிற்கால இலக்கண நூல்கள் ஐந்து பகுதிகள் கூறின. ஏறக்குறையப் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் ‘பாட்டியல்’ என்னும் ஓரிலக்கணப் பிரிவு உண்டாயிற்று.

பாட்டியல் நூல்கள் இரண்டு பிரிவுகளையுடையன. ஒரு பிரிவு பொருத்தங்கள் கூறுவது. மற்றொரு பிரிவு சிற்றிலக்கிய நூல்கள் எவ்வாறமைதல் வேண்டுமென்று கூறுவது, இவையன்றிப் பாடுவோர் வகை, அவை வகை, பாடல்களுக்குரிய கடவுளர், சாதி முதலியன பற்றியும் இந்நூல்களிற் கூறப்படுவதுண்டு.

சிதம்பரப் பாட்டியல் என்னும் ஒரு நூல் பிற பாட்டியல் நூல்களைப் போலாது முற்கூறிய பிரிவு களையிறுதியிலமைத்து, முதற் பகுதியில் யாப்பிலக் கணமுங் கூறியுள்ளது.

பாட்டியலிலக்கணத்துட் கூறப்படும் முதற் பிரிவு வடநூல் மரபைத் தழுவியதென்று பன்னிரு பாட்டியலின் பதிப்பாசிரியர் விளக்கியுள்ளார். இப் பிரிவிற் கூறப்பட்ட பொருத்தக் குறிப்புக்கள் பழைய செய்யுட்களில் கொள்ளப்படவில்லை. பிற்காலத்தோர் ஒரு வகையான அமைப்புக் கொண்ட பாடல்களால் பாடப்படுவோருக்கு அழிவு நேருமென்றும், ‘அறம்பாடுதல்' கூடுமென்றும் கருதினர்போலும்.

பாட்டியலின் முதற்பிரிவாகிய பொருத்தம் :

மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம், என்னும் பத்துப் பொருத்த-