பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

செந்தமிழ் பெட்டகம்

மும் பாடலிலே தக்கவகை யமைய வேண்டியவையாம் இவற்றோடு நாழிகைப் பொருத்தம், பெயர்ப் பொருத்தம், புட் பொருத்தம் என்பனவும் சேர்த்துக் கூறப் படுதலுண்டு

புலவனொருவன் மனிதரையோ கடவுளரையோ பாடும்போது திரு, மணி, நீர் இவைபோன்ற மங்கலச் சொற்களே முதற் பாட்டீன் முதற் சொல்லாய் நிற்க வேண்டுமென்பது மங்கலப் பொருத்தம் மங்கலச் சொல்லெனினும், செய்யுளோசை நோக்கித் துண்டு பட்டுப் பிரிவதாகவோ, விகாரப்பட்டதாகவோ, தெளிபொருளின்றிப் பலபொருள் படுவதாகவோ முதலில் நிற்கக்கூடாதென்று சொற்பொருத்த மறியப்படும்

முதன் மொழியின் எழுத்துக்களை யெண்ணின் ஒற்றைப்படையாக வரவேண்டும் என்பது எழுத்துப் பொருத்தம் தலைவன் பெயரின் முதலெழுத்தைப் பாலத்தானமாகக் கொண்டு மங்கலச் சொல்லின் முதலெழுத்தை யெண்ணின் அது பாலன், குமரன், இராசன் என்னும் மூன்றனுளொரு தானத்ததாக வேண்டும்; மூப்புத் தானமாகவோ, மரணத்தானமாகவோ இருத்தலாகாது இது தானப்பொருத்தம்

அ ஆ இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ, ஓ இவ்வைந்தும் ஐந்து தானங்களாம் ஆண்பாலரை அப்பாலுக்குரிய குற்றெழுத்தாலும், பெண்பாலாரை நெட்டெழுத்தாலும் தொடங்கிப் பாடுக; அலிப்பாலெழுத்தாகிய ஒற்று, ஆய்தம் இவற்றாற் பாடற்க என்பது பாற்பொருத்த விலக்கணம் அமுதெழுத்து, நஞ்செழுததென் றெழுத்துக்களை வரையறுத்து, அமுதவெழுத்துக்களே முதலில் வரப் பாடுக என்பது உணவுப் பொருத்தம் அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர். இவர்கட்கு இவ் வெழுத்துரியன என்று பகுத்துக்கொண்டு, அவ்வவர்க்குரிய எழுத்து முதலில் வர அவ்வவ் வருணத்தாரைப் பாடுக என்பது வருணப் பொருத்தம் இருபத்தேழு