பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

55

நட்சத்திரங்களுக்கும் எழுத்துக்களைப் பிரித்துரிமைப்படுத்திப் பாடப்படுவோரின் நட்சத்திரத்துக்குத் தகப்பாட்டின் முதலெழுத்திவ்வாறு வரவேண்டுமென்பது நாட்பொருத்தமாம் தேவர், மனிதர், விலங்கு, நரகர் இக் கதிகட்குரிய எழுத்துக்களைக் கூறித் தேவ மனித கதிக்குரிய வெழுத்துகளை முதலிலமைக்கவென்பது கதிப் பொருத்தம் யாப்பிலககணத்துட் கூறப்பட்ட இன்ன சீர் இன்ன கணத்துக்குரியதென மொழிந்து, நீர், திங்கள், துறக்கம், நிலம் இவற்றிற்குரிய சீர்கள் முதலிலமையப் பாடுக என விதிப்பது கணப்பொருத்தம்

இப்பொருத்தங்களொன்றப் பாடின், பாடப் பெறுவோர் நன்மை பெறுவர் இல்லையேல் அவர்க்குக் செல்வம் போம்; நோயாம்; சுற்றம் அறும் மரணமுறும்; சந்ததியில்லையாம் கடவுளரைப் பாடுவோர் பொருத்தங்களமையாது பாடினால், முற்கூறிய கேடுகள் பாடியோர்க்கு நேரும் எனப் பாட்டியலார் கூறுகின்றனர்

இவற்றுள் மங்கலப்பொருத்தம், சொற் பொருத்தமிவை சொல் நோக்கியும் கணப்பொருத்தம் சீர்நோக்கியும், பிற பொருத்தங்கள் எழுத்து நோக்கியும் கூறப்பட்டுள்ளன

திருமணத்தின் முன் பெண்ணுக்கும் அவளை மணந்து கொள்ளும் ஆடவனுக்கும் சாதகமாராய்ந்து பொருத்தம் பார்த்து முடிவு செய்வதுபோன்றே, இங்கும் பாடற் புலவர் பாட்டாகிய மணப் பெண்ணுக்கும் அதனைப் பெறுவோனாகிய தலைவனுக்கும் பாட்டியல் விரித்துக் கூறிய இப்பொருத்தங்களெல்லாம் உள்ளனவா என்றாராய்ந்து பின்னரே பாமகளை இறைக்குச் சேர்த்து வராம்

இப்பாட்டியலிற் கூறப்படும் இரண்டாம் பிரிவு பல வகைப்பட்ட இலக்கிய நூல்கள் எவ்வாறமையவேண்டும் என்றும், எவ்வாறமைந்த நூல்கள் எப்பெயர்க்கு உரியனவென்றும் விளக்குவது பிள்ளைத்தமிழ், கலம்