பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

செந்தமிழ் பெட்டகம்

பகம், அந்தாதி, கோவை, உலா, தூது, குறம், மடல், காதல், பள்ளு முதலிய பலவகை நூல்களின் அமைப்பிலக் கணங்கள் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன அகப்பொருள், புறப்பொருள்களின் துறைகளாகப் பண்டு நின்றன பல இப்பகுதியிற் சிறு பிரபந்தங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன திருவாளர் வையாபுரிப் பிள்ளையவர்கள், ‘திருக்குருகூர்ப்பள்ளு' முன்னுரையில் எழுதியுள்ள பின்வரும் பகுதியறியத் தகுவது .

தமிழிலுள்ள நூல்களை யொருவாறாக வகைப்படுத்தி யெண்ணித் தொண்ணுாற்றாறென நமது முன்னோர்கள் வரையறை செய்திருக்கிறார்கள் இப்பாகுபாடு கி பி 1732-ல் இயற்றப்பெற்ற சதுரகராதியிற் காணப்படுகின்றன சதுரகராதி இயற்றிய வீரமாமுனிவர் இப் பாகுபாட்டிற்கு ஆதாரமாகக் கொண்ட நூல் இது வென்று விளங்கவில்லை ஆனால் இப்பிரபந்தத் தொகை வீரமாமுனிவர் காலத்திற்கு முன்தொட்டே வழக்கிலிருந்து வருவதென்று நிச்சய மாகக் கூறலாம். ஏனெனில், அவர் காலத்திற்கு முன்பிருந்த புலவர்களுடைய நூல்களிலே இத்தொகை குறிக்கப்பட்டுள்ளது ‘தொண்ணுற்றாறு கோலப் பிர பந்தங்கள் கொண்ட பிரான்’ எனப் பழையதொரு நூலின் கண் வருகின்றது வச்சணந்திமாலையில் 55 பிரபந்தங்களும், பன்னிருபாட்டியலில் 60 பிரபந்தங்களும், இலக்கண விளக்கப் பாட்டியலில் 77 பிரபந்தங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன பிரபந்த மரவியல் என்ற நூலின் சிதைந்த பிரதியொன்று அரசாங்கத் தொன்னூல் நிலையத்திலுள்ளது, இதன் கண் தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களும் கூறப்பட்டுள்ளன இதுபோன்றதொரு நூலினை யாதாரமாகக் கொண்டே வீரமாமுனிவர் பாகுபாடு செய்தனரெனக் கருதுதல் தகும்