பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மொழியும்
மக்களும்

ருவர் குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் தாயின் வழியாகப் பேசப் பழகிக் கொள்ளும் மொழியே தாய்மொழி எனப்படும் அதுவே குழந்தைக்கு இயல்பான மொழியாகும் அதனால்தான் குழந்தை முதன்முதல் பயிற்சிபெற வேண்டிய மொழி தாய்மொழியெனக் கொள்ளப்படுகிறது

சிந்தனையும், அதனை வெளியிடும் வாயிலாகிய மொழியும் ஒன்றையொன்று விட்டுப் பிரிக்கமுடியாத தொடர்பைப் பெற்றிருக்கின்றன சிந்தனைக்கும் மொழிக்கும் உள்ள இத்தொடர்பு தாய்மொழியின் வாயிலாக வளர்தலே சால்புடைத்தாம் இவ்வாறு ஒருவர் எண்ணத்தை மற்றொருவர் அறியத் தாய் மொழியே உதவுவதால் மக்களின் பொதுவாழ்க்கைக்கு இது இன்றியமையாத கருவியாகும் தாய்மொழியில் தாம் எண்ணியவற்றைத் தெளிவாகவும் எளிய நடையிலும் சொல்வதற்கும் எழுதுவதற்குமான பயிற்சியை ஒவ்வொருவரும் பெறவேண்டும் தாய்மொழியில் ஒரு பொருளைப் பற்றி எளிய முறையில் தெளிவாகப் பேசவும், ஒரு பொருளைப்பற்றித் தெளிவான எளிய முறையில் எழுதவுமான ஆற்றலை உண்டுபண்ணுவதே தாய் மொழிப் படிப்பின் அடிப்படையான நோக்கமாக வேண்டும்