பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

61

திராவிடரில் சிலர் அங்குச் சென்று குடியேறியிருக்கலாமென்பதாகும் பலூச்சிஸ்தானத்தில் வாழும் ஒரு வகையினர் பேசும் ‘பிராஹுயி’ மொழி தமிழோடு பலவாறு தொடர்புடையதாகக் காணப்படுவதுங்கூட திராவிடர் அவ்வழியாக வெளிநாட்டிற்குச் சென்ற பொழுது அவர்களில் ஒரு கூட்டத்தார் அங்குத் தங்கியிருந்ததினால் தோன்றியுள்ளதே யென்று இவர்கள் கருதுகின்றனர்

ஆனால் வேறு பலர் பல்வேறு வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களைத் திராவிடப்பண்பாட்டோடு தொடர்பு காட்டித் திராவிடத்தின் பிறப்பிடத்தைத் திட்டப் படுத்த முயன்றுள்ளனர் இத் தொடர்களைப் பற்றிச் சற்று ஆராய்தல் தேவை

மங்கோலியா, டூரான், எகிப்து ஆகிய நாடுகளில் வாழ்ந்த பழங்கால மக்களுக்கும் திராவிடருக்கும் சிற்சில பழக்க வழக்கங்களில் ஒற்றுமையுள்ளதாகக் கருதிச் சில அறிஞர்கள் இந்நாடுகளையும் திராவிடரின் தாயகமெனக் கூறுகின்றனர். ஆனால் இவ்வொற்றுமைகள் அடிப்படையானவையல்ல; தற்செயலானவைதாம் எனப் பிற்கால ஆராய்ச்சியாளரான மானிடவியலாளர் சிலர் விளக்கியுள்ளனர்

மேற்கு ஆசியாவைச்சார்ந்த மெசப்பொட்டேமியா, பாபிலோனியா, சுமோரியா, ஈழம் முதலிய மத்தியதரை நாடுகளில் வாழ்ந்த மக்களின் பண்பாடு திராவிடரது பண்பாட்டுடன் பலவகையிலும் அடிப்படைத் தொடர்பு பெற்றிருந்ததெனத் தெரிகிறது எடுத்துக் காட்டாக, மத்தியதரை நாட்டை சார்ந்த லிஷியர்களுக்கு ‘தீரிம்மளி’ என்ற பெயர் வழங்கி வந்ததாக அவர்கள் கல்வெட்டுக்கள்காட்டுகின்றன இது தமிழர் என்ற பெயருடன் சாலவும் பொருந்தியது மேற்கு ஆசியாவைச் சார்ந்த ‘நிப்பர்’, ‘அர்’, ‘ஆஷுர்' முதலிய நகரங்களின் பெயர்கள் தமிழில் ஊர் என்பதை ஒத்திருப்பது நோக்குதற்குரியது தவிர, மேற்கு ஆசிய மக்களாகிய