பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

65

கி மு ஆறாம் நூற்றாண்டிற்குப் பின், ஆரியர்கள் சிலர் தெற்கு வந்து திராவிடரோடு கலந்துகொண்டனர் பெளத்தர்கள், சமணர்கள், பிராமணர்கள் இம்மூவகையினரும், சிறு சிறு கூட்டங்களாகத் தென்னிந்தியாவிற்கு வந்தனர் பிராமணர் முதலிலேயே அரசர்களது செல்வாக்கையும் அரசவையில் சிறந்த பதவியையும் பெற்றனர் நாளடைவில் ஆரியருடைய சில கருத்துக்கள், கொள்கைகள், பழக்க வழக்கங்கள் யாவும் திராவிடப் பண்பாட்டோடு கலந்தன. அதுபோலவே திராவிடருடைய பழக்கங்கள் சிலவற்றை ஆரியரும் பெற்றுக் கொண்டனர் தென்னிந்திய நாகரிகம் அடிப்படையாகத் திராவிடரது நாகரிகமாயிருப்பினும் பல துறைகளில் ஆரியருடைய கருத்துக்களும் சேரப்பெற்று வளர்ந்துள்ளது

திராவிட மொழிகள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் திராவிட மொழிகளில் முக்கியமானவை துளு, கொங்கணி முதலியவை திராவிட மொழிகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியிருப்பினும் பேச்சில் மட்டுமே வழக்கத்திலிருக்கின்றன; எழுதும் மொழிகளாக உருவாகவில்லை

தெலுங்கு, கன்னடம், மலையாளம் இம்மூன்றும் தமிழுடன் தொடர்புடையவை மிகப் பழங்காலத்தில் தமிழையோ அல்லது தமிழுடன் சார்புடைய மொழியையோதான் இம்மக்கள் யாவரும் பேசினரெனத் தோன்றுகின்றது ஆயின், ‘திராவிட'த்திலிருந்து ‘தமிழ்’ என்ற பெயர் தோன்றியதா அல்லது தமிழிலிருந்து திராவிடம் தோன்றியதா என்பதுபற்றி வேற்றுமைப்பட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன ஆரியர் முற்காலத்தில் தென்னாடு சென்ற ‘தஸ்யுக்களை'த் திராவிடரென அழைத்து வந்தனரென்றும், அதிலிருந்தே அவரது மொழி திராவிடமெனும்பெயர் பெற்ற தென்றும் திராவிடத்தின் திரிசொல்லாகக் கால அளவில்

செ. பெ- 5